அக்டோபர் 8, 2022 வரையில் நிதியாண்டு 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல், ரூ. 8.98 லட்சம் கோடி
அக்டோபர் 8, 2022 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக இலக்கம், தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி மொத்த வசூல் ரூ. 8.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 23.8% அதிகம். நேரடி வரி வசூல், மொத்த ரீஃபண்டுகள் ரூ. 7.45 லட்சம் கோடியாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.3% அதிகமாக பதிவாகியுள்ளது. 2022-23 நிதி ஆண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் இந்த வசூல் 52.46% ஆகும்.
மொத்த வருவாய் வசூலில் பெருநிறுவன வருமான வரி (சி.ஐ.டி) மற்றும் தனிநபர் வருமான வரியின் (பி.ஐ.டி) வளர்ச்சியைப் பொறுத்தவரையில் சி.ஐ.டி 16.73%, பி.ஐ.டி 32.30% வளர்ச்சி அடைந்துள்ளன. ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8, 2022 வரை ரூ. 1.53 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய வருடத்தின் இதே காலகட்டத்தில் அளிக்கப்பட்ட தொகையை விட 81.0% அதிகம்.
கருத்துகள்