பட்ட மேற்படிப்பிற்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையைப் பெற, இனி நிதி்த் துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை
தமிழ் நாட்டில், கல்வித் துறை சார்ந்த தேர்வுகள் மற்றும் பட்டமேற்படிப்புகளுக்கு அரசின் சார்பில் ஊதியத் தொகை வழங்கப்படுகிறது.
மத்திய அரசு, அதற்கான தேர்வுகளை நடத்தி தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்க ஊதியத்துடன், அவர்கள் உயர்கல்வியைத் தொடர வழிவகை செய்கிறது. மாநில அரசு ஊக்க ஊதியத் தொகையை சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு வழங்குகிறது. ஆனால் அதைப் பெற, மாநில அரசின் நிதித்துறை அனுமதியளிக்க வேண்டும், அவ்வாறு இல்லையெனில் இத் தொகை கிடைக்காதென்பதே இதுவரை இருந்து வந்த நடைமுறை. தேர்வு மற்றும் பட்ட மேற்படிப்பிற்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையைப் பெற, இனி நிதி்த் துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மட்டும் அனுமதித்தால் போதுமென அரசு அறிவித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
கருத்துகள்