சீட்டு விளையாட்டு உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
அளித்துள்ளதையடுத்து சட்ட மசோதா அரசிதழில் வெளியிடடப்பட்டு அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டம் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்ததையடுத்து அதற்கு தடை விதிக்கும்படி பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி மாநில முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இணையவழி சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டமியற்ற ஒப்புதல் அளிக்கப்படது ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதா அரசிதழில் வெளியிடடப்பட்டு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்து வந்ததையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்து வந்தது.
செப்டம்பர் 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டமியற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் மூன்றாம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில் அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் அக்டோபர் 19. ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மசோதாவை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ததன்படி, இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக நீதிமன்றம் மூலம் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி விளம்பரங்களை வெளியிடும் நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும் ரூ 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை தண்டனை பெற்று மீண்டும் மீண்டும் அதே தவறு செய்யும் நபர்களுக்கு கூடுதல் அபராதமும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. அந்த இணையவழி சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதையடுத்து இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு விரைவில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
கருத்துகள்