ஸ்டெர்லைட் தனியார் தாமிர ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக. நீதிபதி அருனா
ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த பின்னர் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்த நிலையில் நடவடிக்கையில் இறங்கிய. காவல்துறை தலைமை இயக்குனர் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் அலட்சியமும், துாத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குக் காரணம்' என நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், ஆணையம் முன்பாக அளித்த சாட்சியத்தில், இப்பிரச்னைக்கு உயர்நிலைக் குழு அவசியம் என்றும், அதற்கான குழுவில் அரசு சாரா வல்லுனர்கள், புற்றுநோயால் பாதிப்பிற்கு ஆளானவர்கள் பற்றி ஆராய வேண்டும் எனவும், தலைமைச் செயலாளருக்குத் தகவல் அனுப்பியதாகக் கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் சாட்சியப்படி, தலைமைச் செயலாளார், இந்தப் பிரச்னையை மேல் நடவடிக்கைக்காக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்துள்ளார்.
உளவுத் துறை ஐ.ஜி., சத்தியமூர்த்தி அளித்த சாட்சியத்தில், கம்யூனிட்ஸ்ட் கட்சி சார்பு அமைப்புகளின் துாண்டுதலின் படி, போராட்டத்தில் மீனவர்கள் பெருமளவு கலந்து கொள்வார்கள் என்ற தகவலை, காவல்துறை டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அப்போதய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை, சேலத்தில் சந்தித்து, மீன்வளத்துறைச் செயலாளர் வாயிலாக மீனவர்கள் சங்கத்தினரை அழைத்து போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்கலாம் என்ற கருத்தையும், சத்தியமூர்த்தி கூறியுள்ளார். அப்போதய
முதல்வருக்கு உளவுத் துறை தகவல் தெரிவித்தும், சட்டம் ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமலேயே இருந்தது, வியப்பை ஏற்படுத்துகிறது.
தீவிரமாக கவனித்திருந்தால் முற்றிலுமாக பிரச்னையை, ஆரம்ப கட்டத்திலேயே திறம்பட சமாளித்திருக்கலாம். அவ்வாறு செய்யாதது அலட்சியமாகவும், அசட்டையாகவும் இருந்ததற்கு உன்னத உதாரணமாக உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக பணியிலிருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராகப் பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100 வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்டமான பேரணியை பொதுமக்கள் நடத்தினர். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிப் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழநாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து, விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. ஸ்டெர்லைட் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். போராட்டக்காரர்களில் சிலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. அப்போதைய காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறைத் துணைத் தலைவர் அவராகவே அதிகாரத்தைக் கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் உச்சபட்சமாக பொதுமக்கள் மீது சூப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு பற்றியும் அதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், டிஎஸ்பி லிங்க திருமாறன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐஜி சைலேஷ் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன், எஸ்ஐக்கள் சொர்ணமணி, ரென்னீஸ், காவலர்கள் ராஜா சங்கர், சுடலை கண்ணு, தாண்டவ மூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கண்ணன், மதிவாணன் என பல பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையடுத்து, சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விசாரணைக் கமிஷன்களின் அதிகாரமென்ன. அறிக்கைகளால் பலன் கிடைக்குமா? சட்ட வழி உண்டா? ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி மற்றும் நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டு விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இரண்டு அறிக்கைகளிலும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் அதிர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.
விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளுக்கு வலிமை உண்டா? சட்ட அதிகாரம் இருக்கிறதா? அந்த அறிக்கைகளை வைத்து அரசு என்ன நடவடிக்கை எடுத்திட முடியும்? குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டித்து விடமுடியுமா? என்றெல்லாம் பல கேள்விகள் இதில் அடங்கியுள்ளன. விசாரணை ஆணையங்கள் குறித்து சில விபரங்கள்.
விசாரணை ஆணையங்கள் என்ற சட்டத்தை 1952-ஆம் ஆண்டில் உருவாக்கிய மத்திய அரசு. அதற்கான ஆய்வு வரம்புகளையும், அந்த சட்டத்தில் வரையறை செய்திருக்கிறது. ஆக, அந்த சட்டத்தின் படியே மத்திய-மாநில அரசுகள் விசாரணை ஆணையங்களை அமைக்கின்றன. நாட்டில் ஒரு சம்பவம் நடக்கும் போது அது தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பெரும் தாக்கத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட பிரச்சனைகள் அல்லது சம்பவம் குறித்து அரசாங்கத்துக்கு சில தெளிவுகளும் உண்மைகளும் தேவைப்படுவதனை அறிந்து கொள்வதன் மூலம் எதிர்காலங்களில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்பட அல்லது ஒரு நல்ல முடிவினை எடுக்க அரசுக்குத் தேவை. அதற்காக, ஒரு விரிவான சுய அதிகார விசாரணையின் அடிப்படையில் ஒரு அறிக்கை தேவைப்படுகிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை என வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. அது பணியிலுள்ள நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று 1952-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷனின் பரிந்துரையின் பேரில் மூன்று வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதோடு, தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த லிங்கத் திருமாறன் மற்றும் நான்கு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இந்த விஷயத்தை எவ்வளவு சீரியசாக எடுத்துள்ளது என்பதைத் தான் இது பிரதிபலிக்கிறது. ஆணையங்களின் மீதான நம்பிக்கை சற்று துளிர் விடத்துவங்கியுள்ளது. இது தொடருமா என்ற கேள்வியை விட இந்த அதிரடி தொடர வேண்டும்.. என்பதே சாமானிய மக்களின் கோரிக்கை மற்றும் அவா.
கருத்துகள்