பொருளாதார ரீதியாக பின்தங்கிய நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் 2022 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பு.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தேசிய கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் 2022 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2022-23-ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் 2022 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற திறமையான மாணவர்கள் எட்டாம் வகுப்பில் இடைநிறுத்தப்படுவதை தடுத்து, கல்வியை தொடர ஊக்குவிப்பதற்காக தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்பதாம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. மற்றும் மாநில அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பித்தல் தொகையாக 12,000 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
கருத்துகள்