தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
"தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த கவுரவிப்பு அவர்களின் படைப்பாக்கத்திற்கும் பொழுதுபோக்கு, கலை, மற்றும் கலாச்சார உலகத்திற்கான பங்களிப்புக்கும் தகுதியான அங்கீகாரம் ஆகும்."தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ஆஷா பரேக் அவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ஆஷா பரேக் அவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் தெரிவித்துள்ளதாவது:
“ஆஷா பரேக் அவர்கள், ஓர் தலைசிறந்த திரைப்பட ஆளுமையாவார். பன்முகத்தன்மை என்றால் என்ன என்பதை நமது நீண்ட கால பணிக்காலத்தில் அவர் உணர்த்தியுள்ளார். தாதாசாகேப் பால்கே விருது பெற்றமைக்காக அவருக்கு எனது வாழ்த்துகள்.”
கருத்துகள்