தாம்பரம் விமானப்படை மையத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள்
இந்திய விமானப்படை தனது 90வது ஆண்டு விழாவை 2022, அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடியது. இந்நாளை நினைவுகூரும் வகையில் தாம்பரம் விமானப்படை மையத்தில் வான்வழிக் காட்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தாம்பரம் விமானப்படை மையத்தின் அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வானது ஐஏஃப்-யின் முக்கிய திறன்களான நெருக்கமான அமைப்பில் பறப்பது மற்றும் இலக்குகளை சென்றடைய சரியான நேரத்தைப் பின்பற்றுதல் போன்றவற்றை வெளிப்படுத்தியது.
"விஐசி ஃபார்மேஷனில்" உள்ள மூன்று வெவ்வேறு வகையான விமானங்கள், நெருக்கமான அமைப்பில் சீறிப்பாய்ந்து பறந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
குரூப் கேப்டன் பிபி மிஸ்ரா, குரூப் கேப்டன் என் நாகர்கோட்டி மற்றும் குரூப் கேப்டன் எஸ் சாய் கிரண் ஆகியோர் முறையே 'பிலடஸ்', 'கிரண்' மற்றும் 'சேதக் ஹெலிகாப்டர்' அமைப்புகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்.
ஐஏஃப்-யின் சுகோய் 30 ஏர் டாமிநன்ஸ் பைட்டர் ரக விமானம் மிகக்குறைந்த உயரத்தில் பறந்து சாகசம் செய்தது தான் மிகவும் பரபரப்பான நிகழ்வாகும்.
வலிமைமிக்க சூ-30 ரக விமானம் விண்ணில் சீறிப்பாய்ந்து கர்ஜித்தது பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர வைத்தது.
இந்த நிகழ்வில் அனைவரின் கவனத்தை ஈர்த்த பன்முக ஆற்றல் கொண்ட போர் ஜெட் விமானத்தை விங் கமாண்டர் ஆதித்யா சுஹாக் மற்றும் விமான லெப்டினன்ட் அங்கூர் மேத்தா இயக்கினர்.
இடையிடையே மெக்கானிக்கல் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர்களால் மைதானத்தில் பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டது.
வான்வீரர் பயிற்சிக் குழு தங்களது திறமை மற்றும் துல்லியமான செயல்திறனால் கூட்டத்தை கவர்ந்தது.
மைதானத்தில் நடந்த மற்ற நிகழ்ச்சிகளில் தற்காப்பு கலை காட்சி, உடல் பயிற்சி காட்சி மற்றும் சைக்கிள் மீது சாகசம் போன்றவைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன
பத்து வகையான விமானங்களின் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பிரபல கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிழ்வுகளை ரசித்தனர்.
இந்த கண்கொள்ளாகாட்சிகள் பார்வையாளர்கள், குறிப்பாக இளைஞர்கள், ஐஏஃப் மேற்கொள்ளும் வான்வழி வீர, தீர நடவடிக்கைகளை அருகாமையில் பார்க்கும் வாய்ப்பை வழங்கியது.
இந்திய விமானப்படையின் பெருமை மற்றும் நீண்ட வரலாற்றை பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் நமது ராணுவ வீரர்கள் ஆற்றிய முக்கியப் பங்கு குறித்தும் விளக்கி முன்னிலை படுத்தப்பட்டது.
கருத்துகள்