காந்திஜெயந்தியையொட்டி மகாத்மா காந்திக்குப் பிரதமர் புகழாரம் சூட்டி மரியாதை செலுத்தியுள்ளார்
காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறும் மக்களை வலியுறுத்தியுள்ளார்
மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறும் மக்களைத் திரு மோடி வலியுறுத்தினார். மகாத்மா காந்தி குறித்த தமது எண்ணங்களின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“காந்திஜெயந்தியன்று மகாத்மா காந்திக்குப் புகழஞ்சலி செலுத்துகிறேன். இந்தியா, சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவைக் கொண்டாடுவதால் இந்த காந்திஜெயந்தி கூடுதல் சிறப்பு கொண்டது.தேசத்தந்தையின் சிந்தனைகளுடன் எப்போதும் வாழ்வோம். காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறும் மக்களை நான் வலியுறுத்துகிறேன். எனவும், மேலும்
லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை
தில்லி பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் லால்பகதூர் சாஸ்திரி அரங்கில் இடம்பெற்றுள்ள ஒரு சில காட்சிகளையும் பிரதமர் பகிர்வு
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். லால் பகதூர் சாஸ்திரி குறித்த தமது காணொளி ஒன்றையும் பிரதமர் பகிர்ந்தார். பிரதமராக அன்னாரது வாழ்க்கை பயணம் மற்றும் சாதனைகளை விவரிக்கும் வகையில் தில்லியின் பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள லால் பகதூர் சாஸ்திரி அரங்கில் இடம்பெற்றுள்ள ஒரு சில காட்சிகளையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
“தமது எளிமை மற்றும் சிறந்த முடிவுகளை எடுக்கும் குணத்திற்காக இந்திய மக்கள் அனைவராலும் லால் பகதூர் சாஸ்திரி ஈர்க்கப்படுகிறார். நம் வரலாற்றின் கடிமனமான சூழலில் அவரது திடமான தலைமைப் பண்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். அன்னாரது பிறந்தநாளன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”
“பிரதமராக அவரது வாழ்க்கை பயணம் மற்றும் சாதனைகளை விவரிக்கும் வகையில் தில்லியின் பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள லால் பகதூர் சாஸ்திரி அரங்கில் இடம்பெற்றுள்ள ஒரு சில காட்சிகளையும் சாஸ்திரி அவர்களின் பிறந்தநாளன்று பகிர்கிறேன். அருங்காட்சியகத்தை நேரில் சென்று பாருங்கள்....”
கான்பூரில் டிராக்டர்-டிராலி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
கான்பூரில் டிராக்டர்-டிராலி இடையேயான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவித்தருப்பதாவது
“கான்பூரில் நிகழ்ந்த டிராக்டர்-டிராலி விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தங்கள் அன்பிற்குரியவர்களை இந்த விபத்தில் இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள்.
காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது:
“பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”எனப் பதிவு செய்துள்ளார்
கருத்துகள்