விமானத்தில் தங்கம் கடத்திய இருவர் கைது
விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மும்பையில் இருந்து சென்னைக்கு நேற்று விஸ்தாரா விமானத்தில் வந்த இருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறைனர் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த பையில் 24 கேரட் தூய தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டது. 2.7 கிலோ எடை கொண்ட இதன் மதிப்பு 1.18 கோடி ரூபாய் ஆகும். இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இத்தகவல் சென்னை விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்