பிலாஸ்பூர் பேரணியி்ல் மாணவர்களின் கலைப் படைப்புகளை பிரதமர் பாராட்டினார்
இமாசலப்பிரதேசம் பிலாஸ்பூர் பேரணியில் பிரதமர் உரை குறித்து இரண்டு மாணவர்களின் கலைப் படைப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். படைப்பூக்கம் உள்ள இந்த படங்களுக்காக மாணவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
பத்திரிகையாளர் டாக்டர் அஷ்வினி சர்மாவின் ட்விட்டரை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“சிறப்பான படைப்பு… உங்களுக்கு நன்றி உமாங், பூனம்”சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை; பிரதமர் பாராட்டு
சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனைக்கான குடிமக்களின் முயற்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். காசியில் இதேபோன்ற முயற்சியைப் பகிர்ந்து கொண்ட அவர் தனது மனதின் குரல் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
குடிமகன் ஒருவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் தமது ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இதனைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது... இந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த ஆண்டு மனதின்குரல் நிகழ்ச்சி ஒன்றில் இதேபோன்ற முயற்சியை நான் காசியில் பகிர்ந்துகொண்டேன். அதையும் பகிர்கிறேன்.
https://t.co/bEmz0u4XvO”
கருத்துகள்