காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வுக்கு நடத்தப்பட்ட தேர்தல் வாக்குப்பதிவு திங்கள் கிழமை மாலை 4 மணியுடன் நிறைவானது.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து மொத்தம் 711 பேர் வாக்களிக்க வேண்டியதில் 659 நபர்களின் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தலைவர் பொறுப்பிலிருந்து சோனியாகாந்தி குடும்பம் விலகுவதாகக் கூறிய நிலையில், தலைவர் பதவிக்கு மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவும் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி), காங்கிரஸ் செயற்குழு (CWC), பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC), மாவட்ட மற்றும் தொகுதி காங்கிரஸ் கமிட்டி என குழுக்கள் வாரியாக அமைக்கப்பட்டதுதான் காங்கிரஸ் கட்சி.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் 1500 உள்ளனர். அவர்கள் காங்கிரஸ் செயற்குழுவின் (CWC) 24 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.இந்தியா முழுவதும் மொத்தம் 30- க்கும் மேற்பட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் உள்ளன. கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்க சுமார் 9,100 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளனர். டெல்லியில் தங்கியுள்ள கட்சியின் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் வாக்களிப்பதற்காக சிறப்பு வாக்குச் சாவடி காங்கிரஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்களிக்க தகுதியுள்ள 710 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட வாரியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ரகசிய முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் வாக்காளர்கள் யாராவது ஒருவருடைய பெயரை எழுதி அல்லது டிக் செய்து வாக்குப்பெட்டியில் போட வேண்டும்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு அனைத்து வாக்குப் பெட்டிகளும் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அக்டோபர் 19 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. குறிப்பிட்ட மாநிலத்தில் எந்த வேட்பாளர் எவ்வளவு வாக்குகள் பெற்றார் என்பதை அறியாத வகையில், அனைத்து மாநிலங்களின் வாக்குச் சீட்டுகளும் ஒட்டுமொத்தமாக கலக்கப்பட்டு, அதன்பின் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் ,
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இந்திய ஒற்றுமைப் பயண முகாமில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்களித்தார். காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 92.68 ஆகும்.
கருத்துகள்