தமிழ்நாட்டில் புதிய மனைப்பிரிவு, மற்றும் கட்டிட அனுமதிக்கான அரசு கட்டணங்களை உயர்த்துவதற்கான பரிந்துரையை
அனுப்ப வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவு தற்போது உள்ளாட்சித்துறை சொத்து வரி, மின்சாரக் கட்டணம் என பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது, புதிய கட்டுமானத் திட்ட அனுமதி கட்டணங்களை உயர்த்தும் பணிகளும் துவங்கியுள்ளது.
தமிழ்நாடு நகர ஊரமைப்புத் துறை (டி.டி.சி.பி)., மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ). புதிய கட்டடங்களுக்கான திட்ட அனுமதி, மனைப் பிரிவுகளுக்கான ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இதற்காக பரிசீலனைக் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், வைப்புத் தொகை, ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி நில ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய தலைப்புகளில் விதவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, 1 சதுர அடிக்கு திட்ட அனுமதி பெற, 60 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதில், ஓ.எஸ்.ஆர்., உள்கட்டமைப்பு கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும்.
மேலும், கட்டுமான திட்ட அனுமதியில் அதிகாரிகள், ஊழல் மற்றும் மறைமுக ஊழல் அரசியல் புள்ளிகளுக்கு சதுர அடிக்கு, 50 ரூபாய் என்ற அடிப்படையில், தனியாக வசூல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கட்டட அனுமதி, மனைப்பிரிவு ஒப்புதல் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் தரப்பில் தெரிவித்த தகவல் :-
"தமிழகத்தில் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவதும் வழிமுறைகளை வகுக்க, ஆறாவது மாநில நிதிக் குழு அமைக்கப்பட்டது. இதன் உயர் நிலை குழு துறைவாரியாக, நிதி மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை அளித்துள்ளது.
இந்த பரிந்துரை அடிப்படையில், வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை, சி.எம்.டி.ஏ., சார்பில் டி.டி.சி.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், புதிய மனைப்பிரிவு ஒப்புதல், கட்டுமான திட்ட அனுமதி கட்டணங்களை உயர்த்துவதற்கான வரைவு அறிக்கையை தயாரித்து அனுப்பவும், அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளுக்கான அபராதத்தை, ஐந்து மடங்காக நிர்ணயிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது"எனக் கூறினர்.
இது தொடர்பாக, கட்டுமான துறை சார்ந்த நபர் தெரிவித்த கருத்து,:-
"கட்டுமான திட்ட அனுமதி கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், அது வீடுகளின் விற்பனை விலையில் எதிரொலிக்கும்.
இதனால், புதிய வீடுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது வீடுகள் விலையை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்". எனக்
கூறினர்.
கருத்துகள்