பாதுகாப்பு கணக்குகள் துறை தினம் பாதுகாப்பு கணக்குகள் துறையானது ( Defence Accounts Department) 01/10/1951 அன்று நிறுவப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் 01 அக்டோபர் அன்று இந்தியா முழுவதும் அனைத்து அலுவகங்களிலும் பாதுகாப்பு கணக்குகள் துறை தினம்
பாதுகாப்பு கணக்குகள் துறையானது ( Defence Accounts Department) 01/10/1951அன்று நிறுவப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் 01 அக்டோபர் அன்று இந்தியா முழுவதும் அனைத்து அலுவகங்களிலும் பாதுகாப்பு கணக்குகள் துறை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் வினாடி வினா போட்டி நடைபெற்றன. மேலும் ரத்த தான முகாம் செஞ்சிலுவை சங்கம் மூலம் நடைபெற்றது. இந்த முகாமில் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ரத்த தானம் செய்தனர்.
பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் திரு டி.ஜெயசீலன், விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இவ்விழாவில் ஜிஓசி, டிபி ஏரியா ஜெனரல்ஆபிசர் காமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தமது சிறப்புரையில், இத்துறையின் முக்கியத்துவத்தையும் ராணுவத்திற்கு இத்துறையின் சிறப்பான செயல்பாடு பற்றியும் குறிப்பிட்டார். சிறப்பாக பணியாற்றிய ஐந்து அலுவலர்களுக்கு சிறப்பு பதக்கங்களை அவர் வழங்கினார்.
இப்பதக்கம் பெற்றவர்களுள் ஒருவரான திருமதி செல்வி, டெலிபோன் ஆபரேட்டர் ஆக சிடிஏ சென்னை அலுவலகத்தில் கடந்த 25 வருடங்கள் ஆக பணியாற்றி வருகிறார். இவரின் குரலை அறியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் இவர் உலகத்தை பார்த்ததே இல்லை, காரணம் இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
உலகத்திற்கு தெரியாத இவரின் ஓய்வில்லாத உழைப்பை தெரியவைத்தது சிஓசி வழங்கிய பதக்கம்ஆகும். இதை பற்றி அவர் கூறும்போது, தான் எத்தனையோ பேருக்கு வழங்கிய 1200 பதக்கங்களை விட இவருக்கு வழங்கிய பதக்கத்தை பெருமையாக நினைக்கிறேன் என்று மனம் உருகி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் 400 அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் வினாடி வினா போட்டி நடைபெற்றன. மேலும் ரத்த தான முகாம் செஞ்சிலுவை சங்கம் மூலம் நடைபெற்றது. இந்த முகாமில் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ரத்த தானம் செய்தனர்.
பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் திரு டி.ஜெயசீலன், விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இவ்விழாவில் ஜிஓசி, டிபி ஏரியா ஜெனரல்ஆபிசர் காமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தமது சிறப்புரையில், இத்துறையின் முக்கியத்துவத்தையும் ராணுவத்திற்கு இத்துறையின் சிறப்பான செயல்பாடு பற்றியும் குறிப்பிட்டார். சிறப்பாக பணியாற்றிய ஐந்து அலுவலர்களுக்கு சிறப்பு பதக்கங்களை அவர் வழங்கினார்.
இப்பதக்கம் பெற்றவர்களுள் ஒருவரான திருமதி செல்வி, டெலிபோன் ஆபரேட்டர் ஆக சிடிஏ சென்னை அலுவலகத்தில் கடந்த 25 வருடங்கள் ஆக பணியாற்றி வருகிறார். இவரின் குரலை அறியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் இவர் உலகத்தை பார்த்ததே இல்லை, காரணம் இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
உலகத்திற்கு தெரியாத இவரின் ஓய்வில்லாத உழைப்பை தெரியவைத்தது சிஓசி வழங்கிய பதக்கம்ஆகும். இதை பற்றி அவர் கூறும்போது, தான் எத்தனையோ பேருக்கு வழங்கிய 1200 பதக்கங்களை விட இவருக்கு வழங்கிய பதக்கத்தை பெருமையாக நினைக்கிறேன் என்று மனம் உருகி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் 400 அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது.
கருத்துகள்