இந்திய தர நிர்ணய அமைவனத்தின் உலக தர நிர்ணய தின நிகழ்ச்சி "நிலையான வளர்ச்சி இலக்கிற்கான தர நிலைகள் - ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது
சர்வதேச தர நிர்ணய அமைவனம் (ISO) , சர்வதேச மின்னணு தொழில் நுட்ப கூட்டமைப்பு (IEC), சர்வதேச தகவல் தொடர்பு கூட்டமைப்பு (ITU) இவற்றின் வல்லுநர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 14-ம் தேதி உலக தர நிர்ணய தினம் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும், சர்வதேச நிலையை மனதில் கொண்டு ஒரு தலைப்பில் / பொருளில் கொண்டாடப்படுகின்றது. உலக தர நிர்ணய தினத்தின் ஒரு பகுதியாக BIS தென்மண்டல அலுவலகம், சென்னை மூவர்ணக் கொடியால் பிரகாசிக்கப்பட்டது மற்றும் உலக தரநிலைகள் தின THEME குறித்த செய்திகள் மற்றும் ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பொருட்கள் பற்றி பொதுமக்களுக்கான டிஜிட்டல் திரைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த வருடத்திற்கான தலைப்பு / பொருள் "நிலையான வளர்ச்சி இலக்கிற்கான தர நிலைகள் - ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை ". இந்திய தர நிர்ணய அமைவனம் - தென் பிராந்திய அலுவலகம், சென்னை, இந்த உலக தர நிர்ணய தினத்தை (மானக் மஹோத்ஸவ்) அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, சென்னையில் இன்று கொண்டாடியது.
ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விஞ்ஞானி எஃப் & துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு பிராந்தியம்), பிஐஎஸ், தனது வரவேற்பு உரையின் போது தர நிர்ணயங்களின் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அது வகிக்கும் பங்கை வலியுறுத்தினார். சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து சமகால நவீன உலகம் வரையிலான தரநிலைகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சிக்கானகண்டுபிடிப்புகளை கொண்டு வருவதிலும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தரப்படுத்தலின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பார்வையாளர்களுக்கு விளக்கினார். ஒரு சிறந்த உலகத்திற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகளின் பங்கை அவர் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.ஆர்.வேல்ராஜ் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றினார். அவரது உரையின் போது அவர் நுணுக்கமான செய்திகள் மூலம் நிலைத்தன்மை மற்றும் ஆண்டுகாலமாக இருக்கும் நடை முறைகள் பற்றி பார்வையாளர்களை அறிவூட்டினார். அவர் என்ட்ரோபி, சிஸ்டம் மற்றும் சுற்றுப்புறங்கள் பற்றிய கருத்துகளை வெப்ப இயக்கவியலில் (thermo dynamics ) இருந்து தற்கால உலகிற்கு தொடர்புபடுத்தினார். ஒருவர் சிட்டத்தை சிறப்பாக மாற்றும் போது, சுற்றுப்புறத்தில் உள்ள பிரச்சனைகள் அதிகரிக்கின்ற நிலையும் அதை குறைந்தபட்சமாக வைத்திருப்பதே சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர், தற்போதைய சென்னை மெட்ரோ வெள்ள மேலாண்மைக் குழுவின் தலைவருமான Dr.V.திருப்புகழ், IAS (ஓய்வு) தொழில்நுட்ப அமர்வின் தலைவராக கலந்து கொண்டு நிகழ்வை நடத்திக்கொடுத்தார். Dr.V.திருப்புகழ் அவர்கள் Sendai Framework ( பேரழிவு அபாயத்தின் முப்பரிமாணங்களை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகிறது), நிலையான வளர்ச்சி இலக்குககளின் ஒன்றோடொன்றான தொடர்பைக் குறிப்பிட்டார். அனைத்து 17 நிலையான வளர்ச்சி இலக்குகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு 2030 ஆம் ஆண்டுக்குள் முழுமை அடைய வேண்டும் என்றும் , இதுவே பொருளாதார மற்றும் உயிர் இழப்பை தடுக்கும் என்றார்.
சிறப்புப் பேச்சாளர்கள் குழு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் " மேம்பட்ட வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள் - சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை "என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்
நுட்ப அமர்வில், சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட டாக்டர் எஸ்.ஜனகராஜன், முன்னாள் பேராசிரியர், MIDS & தலைவர் SaciWATERS ஹைதராபாத் சுத்தமான நீர் மற்றும் சுத்திகரிப்பு பற்றி பேசினார். அவரது அதிகரித்து வரும் நீர் தேவை மற்றும் குறைந்து வரும் நீர் வளம் பற்றி அவர் குறிப்பாக இந்தியாவின் தண்ணீர் சூழ்நிலையைப் பற்றி பேசினார், உலகின் தனிநபர் நீர் கிடைப்பதில் இந்தியா 50 வது இடத்தில் உள்ளது. உலகின் புதுப்பிக்கத்தக்க நீர் வளத்தில் 4% இந்தியாவிடம் உள்ளது. விவசாய நீருக்கான கிடைக்கும் நீர் தொடர்பான பிரச்சனைகளையும் அவர் விளக்கியதோடு , நீர் பயன்பாடு மற்றும் இருப்பு நிலைத்தன்மையின் நிலைத்தன்மையின் அதிகரிப்புக்கான காரணங்களை மேற்கோள் காட்டினார்.
ஐஐடி-மெட்ராஸின் பேராசிரியர் ஸ்ரீ ரமேஷ் கர்தாஸ், நிலையான இரசாயன மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தீங்கற்ற கரைப்பான்கள் பற்றி உரையாற்றினார். நிலையான தீர்வுகளை உருவாக்க அடிப்படை அறிவியலை, பொறியியல் துறையுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
ஸ்ரீ எஸ்.குமாரசாமி, முன்னாள் நிர்வாக இயக்குனர், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தொழில், புதுமை மற்றும் உள்கட்டமைப்பு & காலநிலை நடவடிக்கை பற்றி பேசினார். சுரங்கத் தொழிலில் நல்ல நடைமுறைகள் மற்றும் சுரங்கத் தொழிலில் SDG கள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன என்பதை விளக்கினார். பசுமை சுரங்கம் மற்றும் ஒருங்கிணைந்த விவசாய முறையின் கருத்தையும் அவர் விளக்கினார்
முன்னதாக, திருமதி.ஜி.பவானி, விஞ்ஞானி-E , இயக்குநர் மற்றும் தலைவர் (சென்னை கிளை அலுவலகம்-,BIS) உலக தர நிர்ணய தின செய்தியை தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள தேசிய தரநிலை அமைப்புகளில் BIS இன் தனித்துவத்தை அவர் விளக்கினார்.
WSD Theme மற்றும் முக்கியத்துவத்தை விஞ்ஞானி-F & தெற்கு மண்டல ஆய்வக தலைவர் திருமதி மீனாட்சி கணேசன் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள தரநிலைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதில் WSD இன் முக்கியத்துவத்தை தெரிவித்தார். இந்திய சூழ்நிலையை மையமாகக் கொண்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சட்டங்களை மேற்கோள் காட்டி ஒவ்வொரு நிலையான வளர்ச்சி இலக்கையும் அவர் விளக்கினார்.
விஞ்ஞானி-பி ஸ்ரீ துர்கா பிரசாத் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
கருத்துகள்