சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். அவரது பாதையில் ராம் மனோகர் லோகியாவும் ஒருவர். இவரது செயல்பாடுகள் மற்றும் சமூகநீதிக் கருத்துகளால் கவரப்பட்டு அரசியலில் வந்தவர் தான் முலாயம் சிங் யாதவ்.
உத்திரப்பிரதேசத்தில் எட்டாவா மாவட்டத்தின் சைஃபை கிராமத்தில் சுதார்சிங், மூர்த்தி தேவி ஆகியவர் மகனாக விவசாயக் குடும்பத்தில் இரண்டாவதாக 1939-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியில் பிறந்தார் நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி என ஐவர் உடன் பிறந்தவர்கள். மெயின்புரியின் ஜெயின் கல்லூரியில் எம்.ஏ., பி.டி. வரை படித்த பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
ராம் மனோகர் லோகியா நடத்தி வந்த ‘சவுகம்பா’ (நான்கு தூண்கள்) எனும் ஹிந்தி வார இதழ் மற்றும் ‘மேன்கைண்ட்’ எனும் ஆங்கில மாத இதழை தொடர்ந்து படித்து வந்தார். இதில் லோகியாவின் கருத்துகளால் கவரப்பட்டு இந்திய சோஷலிச கட்சியின் கோட்டையாக இருந்த ஏட்டா பகுதியின், ஜஸ்வந்த் நகர் பேரவை தொகுதியில் போட்டியிட முலாயம் சிங் யாதவிற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலியின் சிபாரிசில். முலாயம் சிங் யாதவ் இத்தொகுதியில் வென்று இந்தியாவின் இளம் எம்எல்ஏக்களில் ஒருவரானார். அப்போது முதல் அவரை மக்கள், ‘நேதாஜி’ என அழைக்கத் தொடங்கினர்.
1977-ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேச. பேரவைத் தேர்தலில் 3-வது முறையாக தேர்வானவர் கூட்டுறவுத் துறை அமைச்சரானார்.பிறகு, மிசா சட்டத்துக்கு எதிராக உருவான ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் முலாயம் சிங் யாதவ் இருந்தார். ஜன சங்கம் இரண்டான பிறகு சரண்சிங் தலைமையில் உருவான லோக் தளத்தின் உத்திரப் பிரதாச. மாநிலத் தலைவராக சில மாதங்கள் இருந்தார். முன்னால் பிரதமர் சரண்சிங் மறைவுக்கு பிறகு லோக் தளம் கட்சி, லோக்தளம்-ஏ (அஜீத் சிங்), லோக் தளம்-பி (பகுகுணா) என இரண்டானது. இதில் பகுகுணா கட்சியின் உ.பி. மாநிலத் தலைவரானார் முலாயம். பிறகு பகுகுணாவும் இறந்து போக, இந்த சமயத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய முன்னால் பிரதமர் வி.பி.சிங், ஜனதா தளம் கட்சியை உருவாக்கி அதில் லோக்தளம் கட்சிகளையும் இணைந்தார்.
லக்னோவில் 1992,ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதியில் ‘சமாஜ்வாதி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அடுத்து வந்த தேர்தலில் அவருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்க, இரண்டாவது முறையாக முதல்வரானார் முலாயம் சிங் யாதவ் , இரண்டு வருடம் மட்டுமே நீடித்த இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. அப்போது முதல்வராகும் ஆசையில் முலாயமிற்கு அளித்த ஆதரவை மாயாவதி வாபஸ் பெற்றார். வெறும் இரண்டு வருடங்களில் முதல்வர் பதவியை இழந்த முலாயம், 1996- ஆம் ஆண்டில் தேசிய அரசியலில் அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, தேவகவுடா அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.
மாயாவதியும் முலாயம் சிங்கும் பிரதான தலைவர்களாகி அங்கு மாறி, மாறி ஆட்சி செய்தனர். இந்திய நாட்டில் தனித்தன்மை கொண்ட தலைவர் முலாயம் சிங் யாதவ்முலாயம் சிங் யாதவ் இரண்டு திருமணம் செய்தவர். இவரது முதல் மனைவி, மால்தி தேவியை, 1974. ஆம் ஆண்டு திருமணம் செய்தவர் மே 2003-ஆம் ஆண்டில் இறந்தார் அகிலேஷ் யாதவ் முலாயம் சிங் யாதவின் முதல் மனைவி மால்தி தேவி மகன் அகிலேஷ் 2012 முதல் 2017 வரை உத்தரபிரதேச முதல்வராக இருந்தார். 1990 ஆம் ஆண்டில் மால்தி தேவியை திருமணம் செய்துகொண்டார் பிப்ரவரி 2007 வரை குப்தாவ்டன் நன்கு அறியப்பட்டவர் இவர்களது உறவு இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. சாதனா குப்தாவின் முதல் திருமணத்தின் மூலம் பிரதீக் யாதவ் (பிறப்பு 1988) என்ற மகன் உள்ளார். சந்திர பிரகாஷ் குப்தா மற்றும் சாதனா குப்தா (முலாயமின் 2-ஆவது மனைவி) ஆகியோரின் மகன் பிரதீக் யாதவ் பிரதீக்கின் மனைவி அபர்ணா பிஷ்த் யாதவ் (பிறப்பு 1990) 2022-இல் பாஜகவில் சேர்ந்தார். சாதனா குப்தா 2022 சூலையில் இறந்தார்
தற்போது உடல்நலக் குறைவால் முலாயம் சிங் யாதவ் தமது 82 அகவையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர்
முதுபெரும் அரசியல்வாதி திரு.முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு.யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார் என்றும், ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். திரு.யாதவ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது வலிமையான இந்தியாவுக்காக உழைத்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். திரு.யாதவ்-வுடனான தனது நெருங்கிய தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர், யாதவின் கருத்துகளை கேட்க தான் எப்போதும் தயாராக இருந்ததாக தெரிவித்துள்ளார். யாதவுடனான தனது சந்திப்புகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:
“திரு.முலாயம் சிங் யாதவ் ஆளுமை மிகுந்த தலைவர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த ஒரு சிறந்த தலைவராகவும், பணிவுமிக்க தலைவராகவும் அவர் அறியப்பட்டார். யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார். ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர்”.
“திரு.முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் தனித்துவமிக்கவராக திகழ்ந்தார். அவசரநிலை பிரகடன காலத்தில் ஜனநாயகத்தை காப்பதில் முக்கிய வீரராக திகழ்ந்தவர். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அவர் வலிமையான இந்தியாவுக்காக பாடுபட்டார். தேசிய நலன்களை மேம்படுத்துவது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார்”.
“நான் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை திரு.முலாயம் சிங் யாதவை தொடர்பு கொண்டுள்ளேன். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததுடன், அவரது கருத்துகளை கேட்க எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி”.
கருத்துகள்