திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் ஐயங்கார் மகன் பிச்சுமணி ஐயங்கார்.
பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதிப் பெருமாள் திருக்கோவிலில் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார்.
கோவில் திருப்பணி மற்றும் குடமுழுக்கு வேலைகள் நடந்து பனிரெண்டு ஆண்டுகளைக் கடந்து போனதால் தற்போது உபயதாரர்கள் மூலமாக திருப்பணிகள் நடத்த உத்தேசித்துள்ளார்கள் அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து சமய அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்.
அதற்கு மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாநில அளவிலான நிபுணர்கள் கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டிய நிலையில் இருந்துள்ளது. அது சம்பந்தமாக மேற்படி கமிட்டியினர் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியன்று மேற்படி கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளனர்.
அதற்குப் பிறகு கமிட்டியின் உறுப்பினரான தொல்லியல் துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி கடந்த 12.10.2022 அன்று மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மேற்படி அறங்காவலரைச் சந்தித்து பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் கமிட்டியிலிருந்துஆய்வறிக்கை வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் பத்து லட்சம் ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடமிருந்து கேட்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு மூர்த்தீஸ்வரி, லஞ்சத்தை ஐந்து லட்சம் ரூபாய் குறைத்துக் கொண்டு மீதி லஞ்சம் அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும், முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் டிமாண்ட் செய்து கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் பினாப்தலின் இரசாயனம் தடவிய பணத்தை பிச்சுமணி ஐயங்கார் மூர்த்தீஸ்வரியிடம் ஒரு லட்சம் ரூபாய் முன்பணத்தைக் கொடுத்த போது வாங்கியவர் கையுடன் பிடிபட்டார்.
ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் மேல் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோவில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோவில்களின் திருப்பணி வேலைகள் பல நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் மூர்த்தீஸ்வரியின் காரைச் சோதனை செய்த போது அவரது காரில் கணக்கில் வராத ஐந்து லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையில் இவர் போல நூற்றுக்கணக்கான அலுவலர்கள் உள்ளனர் இவர் ஒருவர் சிக்கிய நிலையில் சிக்காத லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் பலர் உள்ளனர்
இதில் பணி ஓய்வு பெற்ற பின்னர் பணியில் நீடிக்கும் சில ஆலய கிளார்க் பணியில் பலர் உள்ளனர் அதில் சில ஆலயங்களில் உண்டியல் பணம் திருடி தண்டனை பெற்ற சிலரும் உண்டு. அறநிலையத் துறையில் புகார் அளித்தாரல் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ள நிலை ஆகவே தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை தக்க சமயத்தில் நடந்தது பாராட்டுப் பெறுகின்றது. தற்போது விசாரணை முடிவில் லஞ்சம் பெற்ற மூர்த்தீஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டார்.புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்று குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில்.. இங்கு என்ன சிறப்பென்றால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலிலிருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இரு வேளையிலும் மருந்தாக இங்கு மனநலம் பாதித்து சிகிச்சை பெரும் நபர்களுக்குத் தரப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளித்து மருத்துவம் வழங்கப்படுகிறது. இது பக்தர்களின் பெருத்த நம்பிக்கையாகவும் உள்ளது. ஏராளமானோர், மிகுந்த நம்பிக்கையுடன் இக் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆலய குடமுழுக்கு மற்றும் திருப்பணி அனுமதிக்கு லஞ்சம் பெற்ற நபர் திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாநகர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் தற்போது லஞ்சம் வாங்கும்போது கைதான மூர்த்தீஸ்வரி.. தொல்லியல் துறை வல்லுனராம் . ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அலுவலராம். மூர்த்தீஸ்வரியிடம் நட்திய தொடர் விசாரணை நடத்தப்பட்டதில்,.. இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார் என்றாலும், இப்படி பல கோவில்களில் லஞ்சமாகப் பணம் பெற்றதும், லஞ்சம் கொடுக்காத கோவில்களில் அறிக்கை சமர்ப்பிக்காமல் இவர் உட்பட இவரது குழுவினர்களும் ஒன்று சேர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார்களாம்.எனவே, இதில் இனி மற்ற அதிகாரிகளுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக இலஞ்ச ஒழிப்புத் துறையில் சந்தேகிக்கின்றனர்..
அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட கோவிலை ஆய்வு செய்து 4 மாதங்காளாகியும் எதனடிப்படையில் அறிக்கையை சமர்ப்பிக்காமல் நிபுணர் குழுவினர் காலம் தாழ்த்தி வந்தனர் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையை கையில் எடுத்திருப்பதால், பல பேர் இதில் சிக்குவார்கள் என்கிறார்கள். சட்ட வல்லுநர்கள்.
கருத்துகள்