கந்தாடகுடி திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டிற்கு பிரதமர் வாழ்த்து
‘கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் போற்றும் வகையில் அமைந்துள்ள மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமாரின் அபிமான திட்டமான கந்தாட குடியின் முன்னோட்டம் வெளியானதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் மறைந்த புனித் ராஜ்குமார் இன்னும் வாழ்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி திருமதி அஸ்வினி புனித் ராஜ்குமாரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் ட்வீட் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் அப்பு இன்னும் வாழ்ந்து வருகிறார். அறிவு கூர்மையான ஆளுமையோடு, ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற திறமை படைத்தவராகவும் அவர் விளங்கினார். இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கந்தாட குடி, ஓர் சமர்ப்பணம். இந்த முயற்சிக்கு எனது நல்வாழ்த்துகள்.”
கருத்துகள்