மகளிர் சக்தியை வலுப்படுத்துவதற்கான கூட்டு உறுதிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு
மகளிர் சக்தியை வலுப்படுத்துவதற்கான 130 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதிப்பாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருவது தொடர்பான மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணியின் ட்விட்டர் பதிவு ஒன்றை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இது, மகளிர் சக்தியை வலுப்படுத்துவதற்கான 130 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் மிகப்பெரிய சமிக்ஞையாகும்.”
கருத்துகள்