முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிமாச்சல் குல்லுவின் தால்பூர் மைதானத்தில் சர்வதேச குல்லு தசரா விழா பிரதமர் வாழ்த்து

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து.மைசூரு தசரா விழாவின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்


மைசூரு தசரா விழாவின் காட்சிகளை பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தங்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அழகிய முறையில் பாதுகாப்பதற்காக மைசூரு மக்களின் உறுதியை பாராட்டினார். அண்மையில், 2022 யோகா தின நிகழ்வின் போது தமது மைசூரு பயணத்தின் இனிய நினைவுகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

குடிமக்களில் ஒருவரின் ட்விட்டரை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

 “மைசூரு தசரா கண்கொள்ளா காட்சியைக் கொண்டுள்ளது. தங்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அழகிய முறையில் பாதுகாப்பதற்காக மைசூரு மக்களை நான் பாராட்டுகிறேன். அண்மையில், 2022 யோகா தின நிகழ்வின் போது எனது மைசூரு பயணத்தின் இனிய நினைவுகளை நான் கொண்டிருக்கிறேன்”.


விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புனித நன்னாள் அனைவரது வாழ்விலும் துணிச்சல், நிதானம், நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“வெற்றியின் அடையாளமான விஜயதசமியன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்த புனித நன்னாள் அனைவரது வாழ்விலும் துணிச்சல், நிதானம், நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்திட விழைகிறேன்.”

குல்லு தசராவில் பிரதமர் பங்கேற்றார்


இமாச்சலப் பிரதேசம் குல்லுவில்  உள்ள தால்பூர் மைதானத்தில் குல்லு தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

பிரதமர் வருகையின்போது  அவருக்கு  அன்பான வரவேற்பு   அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத யாத்திரையைக்  குறிக்கும்வகையில் பகவான் ரகுநாத் வருகை அமைந்தது.  பிரதமரை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்களுடன் நடந்து சென்ற பிரதமர் பகவான் ரகுநாத்தை வணங்கினார். கூப்பிய கைகளுடன் இந்த விழாவில்  பங்கேற்ற அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த பிரதமர் பகவானின் ரத   யாத்திரையையும் வரலாற்றுச் சிறப்புமிக்க குல்லு தசரா விழாவில் கடவுளர்களின் ஒருங்கிணைவையும் தரிசனம் செய்தார். குல்லு தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். 


சர்வதேச குல்லு தசரா விழா குல்லுவின் தால்பூர் மைதானத்தில் 2022 அக்டோபர் 5 முதல் 11 வரை கொண்டாடப்படுகிறது. இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 300க்கும் அதிகமான கடவுளர்கள் ஒன்றுகூடும்  வகையில் இந்த விழா தனித்துவமானதாகும்.  இந்த விழாவின் முதல் நாளில் அலங்கரிக்கப்பட்ட  பல்லக்குகளில் இந்தக் கடவுள்கள், தலைமைக்  கடவுளான பகவான் ரகுநாத் கோவிலுக்கு வந்து வணக்கம் தெரிவித்து பின்னர் தால்பூர் மைதானத்திற்கு செல்வார்கள்

இமாச்சல பிரதேச முதலமைச்சர் திரு ஜெயராம் தாக்கூர், இமாச்சல பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத்  அலேக்கர், மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்,  நாடாளுமன்ற உறுப்பினரும் பிஜேபி தேசிய தலைவருமான திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, நாடாளுமன்ற உறுப்பினரும் பிஜேபி மாநிலத் தலைவருமான திரு சுரேஷ்குமார் காஷியப் உள்ளிட்டோர்  பிரதமருடன் விழாவில் கலந்துகொண்டனர்.

முன்னதாக பிலாஸ்பூர் எய்ம்ஸ்  மருத்துவமனையைப் பிரதமர் நாட்டுக்கு அர்பணித்தார்.  இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் லுஹ்னுவில் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.இமாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களுக்கு பிரதமர் பதிலளிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். இந்தத் திட்டங்களைத் தொடங்கி  வைக்கவும், அடிக்கல் நாட்டவும், இமாச்சலப் பிரதேசத்திற்கு பிரதமர் பயணிக்கிறார்.

பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு, இன்று திறக்கப்படவுள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ட்விட்டர் பதிவு ஒன்றுக்கு, “இந்தியா முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. 2 மற்றும் 3-ஆம் தர நகரங்கள், சிறு நகரங்கள், முன்னேற விரும்பும் மாவட்டங்கள் முதலியவை வளர்ச்சியடைவதற்காக, இவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன”, என்று பிரதமர் பதிலளித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த மற்றொரு கருத்துக்கு பதிலளித்த பிரதமர் திரு மோடி, “உங்கள் கூற்று சரிதான். கூடுதல் மருத்துவ கல்லூரிகள், பிராந்திய மொழிகளில் கல்வி முதலியவையும் எங்கள் முயற்சிகளில் அடங்கும். வளர்ந்து வரும் மருத்துவர்களின் வெற்றி, இது”, என்று தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை 105 இல் ரூ. 1690 கோடி மதிப்பில் பிஞ்சூரில் இருந்து நலகர் வரை நான்கு வழி பாதை அமைப்பதற்கான 31 கிலோமீட்டர் தூர திட்டம் பற்றி ஒருவர் கருத்து தெரிவித்திருந்ததற்கு, “சரியாக சுட்டிக் காட்டினீர்கள்”, என்று பிரதமர் பதிலளித்தார்.பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பிரதமர் பார்வையிட்டார் 

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

இந்த மருத்துவமனையின் சி பிளாக்கிற்கு பிரதமர் வருகை தந்தார்.  பின்னர் பிலாஸ்பூர் வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின்  முப்பரிமாண மாதிரி காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் இந்த  மருத்துவமனை திறப்பு விழாவைக்  குறிக்கும் வகையில் ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிடி ஸ்கேன் மையம், அவசரகால சிகிச்சை மற்றும் விபத்துக்கான சிகிச்சை பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்.

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்ததன் மூலம், நாடு முழுவதும் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாடும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. 2017 அக்டோபரில் இந்த மருத்துவமனைக்கான அடிக்கல்   பிரதமரால்  நாட்டப்பட்டது. பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இது நிறுவப்பட்டுள்ளது


இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 1470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 18 சிறப்பு பிரிவுகள் 17 பன்னோக்கு  சிறப்பு துறைகள் ஆகியவற்றுடன் நவீன முறையில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. 18 அறுவை சிகிச்சைக் கூடங்கள், 64 ஐசியு படுக்கைகளுடன் 750 படுக்கைகள் உள்ளன. 247 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த மருத்துவமனையில் 24 மணி நேர அவசர கால சிகிச்சை, டயாலிசிஸ் வசதி, அல்ட்ராசோனோகிராஃபி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற நவீன நோய்கண்டறிதல்  கருவிகளும் இங்கு உள்ளன. அம்ரித்  மருந்தகம்,  மக்கள் மருத்துவ மையம், 30 படுக்கை வசதி கொண்ட ஆயுஷ் பிரிவு ஆகியவையும் உள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் பழங்குடி பகுதி மற்றும் தொலைதூர பகுதிகளிலும் சுகாதார சேவைகள் கிடைப்பதற்காக டிஜிட்டல் சுகாதார மையத்திற்கான அமைப்பையும் இந்த மருத்துவமனை கொண்டுள்ளது.  எளிதில் சென்றடைய முடியாத பழங்குடிப் பகுதிகள், காஜா, சலூனி, கீலாங் போன்ற மிக உயரத்தில் உள்ள இமாலயப் பகுதிகள் ஆகியவற்றில் சுகாதார முகாம்கள் மூலம்  சிறப்பு சுகாதார சேவைகளையும் இந்த மருத்துவமனை வழங்கும். இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் வகுப்புகளில் 100 மாணவர்களும் செவிலியர் வகுப்புகளில் 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.


பிரதமருடன் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெயராம் தாக்கூர்,  இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்,  மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்,  நாடாளுமன்ற உறுப்பினரும் பிஜேபி தேசிய தலைவருமான திரு ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் சென்றிருந்தனர்.இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூர், லுஹ்னூவில் ரூ.3,650 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பிரதமர் நாட்டுக்கு அர்பணித்தார்

பண்ட்லாவில் அரசு ஹைட்ரோ(புனல்) பொறியியல் கல்லூரியைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

நலாகரில் மருத்துவக் கருவிகள் பூங்காவிற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

ரூ. 1690 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலையின் நான்கு வழிச்சாலை திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

"இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்கும் நல்வாய்ப்பைப் பெற்றுள்ளேன்"


"எங்கள் அரசு அடிக்கல் நாட்டும் திட்டத்தை நிச்சயமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கும்"

"தேசப் பாதுகாப்பில் இமாச்சலப் பிரதேசம் முக்கியப் பங்கு வகிக்கிறது, பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை புதிதாக தற்போது தொடங்கப்பட்ட நிலையில் உயிர் பாதுகாப்பில் அது முக்கியமான பங்களிப்பு செய்யும்"

"அனைவரது வாழ்க்கையிலும் கௌரவத்தை உறுதி செய்வது எங்கள் அரசின் முன்னுரிமை"

"பெண்களின் மகிழ்ச்சி, வசதி, மதிப்பு, பாதுகாப்பு ஆகியவை இரட்டை என்ஜின் அரசின் முக்கியமான முன்னுரிமைகள்"

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5ஜி சேவைகள் தொடங்கிவிட்டன. இமாச்சல பிரதேச 


பின்ஜோரிலிருந்து நலாகருக்கு ரூ. 1690 கோடி மதிப்பில் என்எச் - 105 தேசிய நெடுஞ்சாலையின் நான்கு வழி திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பிரதமர் நாட்டுக்கு அர்பணித்தார். நலாகரில் ரூ. 350 கோடி செலவில் கட்டப்படவுள்ள மருத்துவக் கருவிகள் பூங்காவிற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பண்ட்லாவில் அரசு ஹைட்ரோ பொறியியல் கல்லூரியைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.

அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், புனிதமான விஜயதசமி நாளில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இடையூறுகள் அனைத்தையும் தாண்டி வெற்றிகண்டு வரும் நிலையில் 'ஐந்து உறுதிமொழிகள்' பாதையில் நடைபோட அனைவருக்கும் இந்தப்  புனித விழா புதிய சக்தியை வழங்கும் என்று அவர் கூறினார்.  விஜயதசமியில் இமாச்சலப்  பிரதேசத்தில் இருக்கும் நல்வாய்ப்பு கிடைத்திருப்பது எதிர்காலத்தில் அனைத்து வெற்றிக்குமான முன்னறிவிப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 சுகாதாரம் மற்றும் கல்விக்கான இரண்டு பரிசுகளை பிலாஸ்பூர் பெற்றுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். குல்லு தசரா பண்டிகையில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்த அவர், தேசத்தின் நலனுக்காக பகவான் ரகுநாத்திடம் தாம் பிரார்த்தித்ததாக கூறினார். தாமும் தமது சகாக்களும் இந்தப் பகுதியில் வாழ்ந்து பணி செய்த பழைய காலங்கள் பற்றியும் பிரதமர் நினைவு கூர்ந்தார் ". இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்துள்ள வளர்ச்சிப் பணிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர்,  அனைத்து வளர்ச்சிகளுக்கும் முழு பொறுப்பு மக்கள் அளித்த வாக்குதான் என்றார். மத்திய மாநில அரசுகளின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் உந்து சக்தியாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி, சாலைகள், தொழிற்சாலைகள்,  மருத்துவமனைகள் போன்ற வசதிகள் பெரிய நகரங்களுக்கு மட்டுமே என்ற சிந்தனை வெகுகாலமாக இருந்து வந்தது என்று அவர் கூறினார்.  மலைப்பகுதிகளை பொறுத்தவரை அடிப்படை வசதிகள் கூட கடைசி நேரத்தில் தான் கிடைத்தன.  இது நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய சமச்சீரின்மையை உருவாக்கியதாக பிரதமர் தெரிவித்தார். இதனால் இமாச்சலப் பிரதேசத்தின் மக்கள்  சிறு பிரச்சனைகளுக்குக் கூட சண்டிகருக்கு அல்லது தில்லிக்கு   செல்ல நிர்பந்திக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.  இருப்பினும் கடந்த எட்டு ஆண்டுகளில் இரட்டை என்ஜின் அரசு அனைத்தையும் மாற்றியுள்ளதாகப் பிரதமர் கூறினார்.

இமாச்சலப் பிரதேசம் இன்று ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி போன்ற மத்திய பல்கலைக்கழகங்களைக் கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவின் மருத்துவக் கல்வியில் உயர்நிலை கொண்டதாகும் என்றும் இதனால் பிலாஸ்பூரின் புகழ் அதிகரிக்கும் என்றும் திரு மோடி மேலும் தெரிவித்தார். கடந்து 8 ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசம் வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொட்டிருப்பதாகப்  பிரதமர் கூறினார்.

திட்டங்களை அர்ப்பணிப்பதற்குத்  தெளிவான காலவரம்புடன் அடிக்கல் நாட்டுவதன் மூலம் அரசின்  செயல்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

தேசக் கட்டமைப்பில் இமாச்சலப் பிரதேசத்தின் பங்களிப்பு பற்றி பேசிய பிரதமர், தேசப் பாதுகாப்பில் இம்மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை புதிதாக தற்போது தொடங்கப்பட்ட நிலையில் உயிர் பாதுகாப்பில் அது முக்கியமான பங்களிப்பு அளிக்கும் என்றும் கூறினார். பெருந்தொற்று சவாலையும் மீறி உரிய காலத்தில் பணி நிறைவடைந்திருப்பதற்காக மாநில அரசுக்கும் சுகாதார அமைச்சகத்திற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

மருந்துகளுக்கான மூலப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பூங்காவிற்குத்  தெரிவு செய்யப்பட்ட மூன்று மாநிலங்களில் ஒன்றாக இமாச்சலப்பிரதேசம் இருப்பது இம்மாநில மக்களுக்குப்  பெருமையான தருணம் என்று பிரதமர் தெரிவித்தார். மருத்துவக்  கருவிகள் பூங்காவிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு மாநிலங்களில் ஒன்றாகவும் இமாச்சலப் பிரதேசம் இருக்கிறது என்றும் நலாகர் மருத்துவக் கருவி பூங்கா அதன் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார். 'வீரத்தின் பூமியான இதற்கு நான் கடன்பட்டிருக்கிறேன்' என்று பிரதமர் கூறினார்.

மருத்துவ சுற்றுலா அம்சம் பற்றி எடுத்துரைத்த பிரதமர், இமாச்சல பிரதேசம் வரம்பற்ற வாய்ப்புகளைப்  பெற்றிருக்கிறது என்றார்.  இந்த மாநிலத்தின் காற்று, சுற்றுச்சூழல்,  மூலிகை போன்றவற்றை மாநிலத்தின் கணக்கிலடங்கா ஆதார வளமாகப் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் கூறினார்.

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்க  உத்திரவாதம் அளிக்கும் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், தொலைதூர பகுதிகளில்  மருத்துவமனைகள் இருப்பதை உறுதி செய்வது மற்றும் மருத்துவக்  கட்டணத்திற்கான செலவைக்   குறைக்கும் முயற்சிகள் பற்றியும்  எடுத்துரைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து மாவட்ட மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கும் கிராமங்களில் உள்ள நல்வாழ்வு மையங்களுக்கும் தடையில்லா இணைப்பை ஏற்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.  இந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் இல்லா சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் பயன்படுகிறது. நாடு முழுவதும் 3 கோடி பயனாளிகள் இருக்கும் நிலையில் இமாச்சலப்  பிரதேசத்தில் 1.5 லட்சம் பயனாளிகள் உள்ளனர். நாடு முழுவதும் இதற்கு அரசு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடுகிறது. இதனால் நோயாளிகளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பாகி உள்ளது.

நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் மகிழ்ச்சி, எளிதாகப் பயனடைதல், கவுரவம், பாதுகாப்பு,  சுகாதாரம் ஆகியவற்றை வழங்குவதற்கு இரட்டை என்ஜின் அரசு அடித்தளம் அமைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.  அனைவர் வாழ்க்கையிலும் கௌரவத்தை உறுதி செய்வது எங்கள் அரசின் முன்னுரிமையாகும் என்று பிரதமர் தெரிவித்தார். கழிப்பறை கட்டுதல்,  இலவச சமையல் எரிவாயு இணைப்பு,  நாப்கின் விநியோகத் திட்டம்,  தாய்மை போற்றுதும் திட்டம், வீட்டுக்கு வீடு குடிநீர் இயக்கம் ஆகியவை தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் வசதி அளிப்பவை, என்று நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.  மத்திய அரசின் திட்டங்களை நல்லுணர்வோடும் விரைவாகவும் அமலாக்குவதோடு அவற்றின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் செய்கின்ற முதலமைச்சர் மற்றும் அவரது சக அமைச்சர்களைப் பிரதமர் பாராட்டினார். வீட்டுக்கு வீடு குடிநீர் போன்ற திட்டங்களையும் ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்களையும் விரைந்து அமல்படுத்துவதற்காக அவர் பாராட்டு தெரிவித்தார். அதேபோல் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்பதில்  இமாச்சலப் பிரதேசத்தின்  பல குடும்பங்கள் பெருமளவு பயனடைந்துள்ளன. கொரோனா தடுப்பூசியை 100 சதவீதம் நிறைவு செய்த முதல் மாநிலமாக இருந்ததற்காகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசம் வாய்ப்புகளின் பூமி என்று பிரதமர் வர்ணித்தார். இந்த மாநிலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது, வளமான நிலத்தைக் கொண்டுள்ளது. சுற்றுலா காரணமாக எல்லையற்ற வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.  இந்த வாய்ப்புகளின் முன்னால் மிகப்பெரிய தடையாக இருந்தது  போக்குவரத்து தொடர்பு குறைபாடாகும் என்று பிரதமர்  கூறினார். 2014 முதல்,  இமாச்சலப்  பிரதேசத்தில் கிராமத்திலிருந்து கிராமத்திற்கு சிறந்த அடிப்படை கட்டமைப்பு கிடைக்க முயற்சிகள்  மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் சாலைகள் விரிவாக்கும் பணி அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் போக்குவரத்து தொடர்புக்காக சுமார் 50,000 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். பின்ஜோர் முதல் நலாகர் வரை  நான்கு வழி சாலைப்பணி முடிவடைந்தால் நலாகர், பட்டி ஆகிய தொழிற்சாலை பகுதிகள் பயனடைவது மட்டுமின்றி   சண்டிகர் மற்றும் அம்பாலாவிலிருந்து பிலாஸ்பூர், மண்டி, மணாலி நோக்கி செல்கின்ற பயணிகளும் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

நாட்டின் 5 ஜி தொழில் நுட்பம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் முதன்முறையாக  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 ஜி சேவைகள் தொடங்கியுள்ளன என்றும்  வெகு விரைவில் இதன் பயன்கள் இமாச்சலப் பிரதேசத்திற்கும்   கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.  இந்தியாவில் ட்ரோன் விதிகளில்  மாற்றம் செய்யப்பட்ட பின் அவற்றின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.  கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சுற்றுலா ஆகிய துறைகள் அவற்றின் பயன்களைப் பெற்று வருகின்றன. ட்ரோன் கொள்கையை உருவாக்கிய முதல் மாநிலம் இமாச்சலப் பிரதேசம் என்றும் அவர் புகழ்ந்துரைத்தார்.   வளர்ச்சி அடைந்த இந்தியா வளர்ச்சி அடைந்த இமாச்சல பிரதேசம் என்ற உறுதி ஏற்பு இதனை நிரூபிக்கும் என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

இமாச்சல பிரதேச முதலமைச்சர் திரு ஜெயராம் தாக்கூர், இமாச்சல பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத்  அலேக்கர், மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்,  நாடாளுமன்ற உறுப்பினரும் பிஜேபி தேசிய தலைவருமான திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, நாடாளுமன்ற உறுப்பினரும் பிஜேபி மாநிலத் தலைவருமான திரு சுரேஷ்குமார் காஷியப் உள்ளிட்டோர்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...