இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாமாண்டில், மொழிப் பாடத்தில் தமிழ் கட்டாயம் இடம் பெற வேண்டுமென, உயர்கல்வித் துறை உத்தரவு.
பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு, உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் அனுப்பியுள்ள கடிதத்தில்:
திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் தெரசா பல்கலைக்கழகங்ளில், பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு, இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வில், தமிழ் மொழிப் பாடம் இடம் பெறவில்லை.அதனால் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு நடத்தப்படும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளில், தமிழ் பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்