அஞ்சலக வங்கி மூலம் விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள்(தபால்காரர்/ கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம் மிகக் குறைந்த பிரீமியம் தொகையுடன் விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டாடா ஏஜஜி ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா போஸ்டல் பேமெண்ட்ஸ் வங்கி, இந்த திட்டத்தை செயல்படுத்தும். 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் / விரல் ரேகை மூலம் வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படும்.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு/ நிரந்தர முழு ஊனம்/ நிரந்தர பகுதி ஊனம்/ பக்கவாதம்)
விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60000 வரை/ புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 30000 வரை)
விபத்தினால் மரணம்/ ஊனம்/பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.100000/ வரை
விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.1000/- வீதம் 10 நாட்களுக்கு (1 நாள் கழிக்கப்படும்)
விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 25000/-வரை.
விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ. 5000வரை.
ஆண்டிற்கு வெறும் ரூ.399-ல் /ரூ. 396 –ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த குழு விபத்து காப்பீட்டு பாலிசியை பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/ தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு சென்னை வடக்கு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு லெக்ஷ்மணன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
கருத்துகள்