தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்தார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி இரண்டாவது வாரத்தை எட்டிய நிலையில் பான் இந்தியா முறையில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம்,கன்னடம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியானது. முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. படம் முதல் வாரம் மட்டும் ரூ.308.59 கோடியை வசூலித்தது. இரண்டாவது வாரத்தில் 400 கோடி வசூல் ஆன நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல திரையரங்கான ஐ மேக்ஸ் தியேட்டரில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்தார்.
அவரை திரையரங்கத்தின் தலைமை செயல் அலுவலர் ஜெ.விவேக் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஜாஸ் சினிமாஸ், உரிமையாளரும் சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக் வரவேற்றார். இவர் இளவரசியின் மகனாவார்,சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள சத்யம் சினிமாஸின் 11 திரையரங்குகளை சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் 2015 ஆம் ஆண்டு வாங்கியது பீனிக்ஸ் வணிக வளாகத்தின் நிர்வாகமோ, ஜாஸ் சினிமாஸ் திரையரங்குகளை ரூ 1000 கோடிக்கு சசிகலா வாங்கியதாக கூறுவது உண்மையல்ல.சென்னையில் உள்ள எங்களது 11 திரையரங்குகளை யாருக்கும் விற்கவில்லை. ஜாஸ் சினிமாஸ் வாடகை அடிப்படையில் தான் திரையரங்குகளை நடத்தி வருகிறது எனத் தெரிவித்தது நினைவிருக்கும்.
கருத்துகள்