அதிமுகவில் வழிநாடத்தும் தலைமை மீண்டும் இரண்டாக உடைந்த நிலையில் நடக்கும் போட்டி மற்றும் பசும் பொன் வரை நீளும் பதவிச் சண்டைக் களம்
2014- ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளராக. இருந்து காலம்சென்ற முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா பசும்பொனில் உள்ள உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன் நினைவிடத்தில் உள்ள உருவச் சிலைக்கு ரூபாய்.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தேவர் ஜெயந்தியன்றும் நினைவிடத்தில் பொருத்தப்படும்.
அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் மதுரை அண்ணா நகரிலுள்ள வங்கி லாக்கரில் இந்தக் கவசம் வைக்கப்பட்டுள்ளது. அதனை அங்கிருந்து பசும்பொன்னுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு தேவர் ஜெயந்திக்கு முன்பும் வங்கிக்கு வந்து லாக்கரிலுள்ள தேவரின் தங்க கவசத்தை எடுத்து விழா கமிட்டி பொருப்பாளரிடம் ஒப்படைப்பார். விழா முடிவடைந்ததும் அதே போன்று தங்க கவசத்தை முறைப்படி பெற்று வங்கிக்கு வந்து ஒப்படைப்பார். அனால் தற்போது பிரிந்துபோய் இரண்டு தரப்பிலும் தனித்தனியாக வங்கியில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவரின் தங்க கவசம் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பது வங்கி நிர்வாகம் அறியாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக தேவரின் நினைவிடப் பொறுப்பாளரான. தேவரின் அக்கா மகன் காலஞ்சென்ற நடராஜத்தேவர் மனைவி காந்திமீனாள் நடராஜன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில்.
இரண்டு முறை மதுரை வந்த திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் கடிதம் அளித்தும் வங்கி நிர்வாகத்தினர் தேவர் நினைவிட பொறுப்பாளரான காந்தி மீனாள் நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர வலியுறுத்திக் கூறியதாகத் தெரிகிற நிலையில் காந்தி மீனாள் நடராஜனைச் சந்தித்து பேசுவதற்காக திண்டுக்கல் சீனிவாசனுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் உள்ளிட்ட எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க.வினர் பசும்பொன் சென்றனர். நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அருகிலுள்ள தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தனர்.
அதன் பின்னர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் ``தேவர் குருபூஜை விழா ஏற்பாடு குறித்து பார்வையிடுவதற்காக வந்த போது நினைவிடப் பொறுப்பாளர்களிடம் காலை முன்னாள் அமைச்சர்கள் வந்து என்ன பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என கேட்ட போது. அதிமுக முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ. ஜெயலலிதா வழங்கிய தங்கக் கவசத்தைப் பெற தங்களுக்கு ஆதரவளிக்கும் படி அவர்கள் கோரிக்கை வைத்ததாகவும். அதற்கு இது உங்களது உள் கட்சி விவகாரம், நாங்கள் நடுநிலையாகத்தான் செயல்படுவோம், வங்கி யாரிடம் ஒப்படைகிறதோ அவர்கள் தங்கக் கவசத்தைக் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வதாக கூறியதாக அவரிடம் தெரிவித்ததாகவும். கூறிய நிலை ஆனால்
தேவர் தங்க கவச விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வமும் வேண்டாம், எடப்பாடி கே.பழனிச்சாமியும் வேண்டாம் அரசு ஆதரவு மட்டுமே வேண்டும் என தேவர் நினைவில் அறங்காவலர் பரபரப்பு பேட்டி
தங்கக் கவசம் உள்ள வங்கியின் லாக்கர் சாவி என்னிடம் உள்ளது. வங்கியிலுள்ள தங்கக் கவசத்தைப் பெற்று தேவர் சிலைக்கு வைக்க உள்ளேன் என்றார்
தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் பசும் பொன்னில் செய்தியாளர்களிடம் பேட்டி. ஆனால் அது சாத்தியமா என்பதே எழு வினா ? அதிமுக அதிகாரப் போட்டி தற்போது தேவர் ஜெயந்தி தங்கக் கவசம் வங்கியில் வாங்குவது யார் என்ற நிலை அரசியல் அதிகாரம் பெறத் துடிக்கும் இவர்கள் தான் நம்மை இதற்கு முன் ஆட்சி அதிகாரம் செய்த ஊழல் சுயநலக் கும்பல் என்பதே இங்கு பொது நீதி.பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பொறுத்து எடப்பாடி எடுத்த முடிவுகள் மாறும். எதிர்க்கட்சி துணை தலைவர் மாற்றப்பட்ட முடிவும் மாறுதலுக்கு உரியதே என்ற நிலையில். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூடும் நிலையில் எதிர்க்கட்சி்த் துணைத் தலைவர் செட்டில் அமரப் போகும் நபர் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் தான் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது
சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை சம்பந்தப்பட்ட முக்கிய ஆலோசனையை சபாநாயகர் நடத்த வேண்டிய நிலை
உள்ளது தொடர்பாக கொறடா வேலுமணி சார்பாக சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதப்பட்டது. அதன் காரணமாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட காரணமாக . ஆர்பி உதயகுமாரை துணைத் தலைவராகத் தேர்வு செய்கிறோம் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது.
எதிர்க்கட்சி துணை தலைவரை நீக்குவதென்றால் அதற்கு சபாநாயகர் தான் அனுமதி அளிக்க வேண்டும். என்ன முடிவு எடுக்க போகிறார் எனக் கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைப் பொறுத்து எடப்பாடி எடுத்த முடிவுகள் மாறும். எதிர்க்கட்சி்த் துணை தலைவர் மாற்றப்பட்ட முடிவும் மாறும உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பொறுத்து எடப்பாடி எடுத்த முடிவுகள் மாறும்.
இதில் தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சபாநாயகர் (ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் இருந்தாலும்) இதை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வி உள்ள நிலையில் தான் தற்போது சட்டசபையில் இருக்கை பிரச்சனை
எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அருகே ஓ. பன்னீர்செல்வத்தை அமர வைக்கக் கூடாதென்ற கோரிக்கையை எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு வைத்துள்ளது. எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் என்பதால் இரண்டு பேரையும் அருகருகே அமர வைத்துள்ளனர். இப்படி அமர வைக்க கூடாது. ஓ பன்னீர்செல்வதை வேறு இடத்தில் அமர வைக்கச் சொல்லலாம் என்று எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
கருத்துகள்