காவலர் நினைவு தினத்தையொட்டி காவல் படையினரின் துணிவைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
காவலர் நினைவு தினத்தையொட்டி இன்று காவல் படையினரின் துணிவையும், பங்களிப்பையும், பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இன்று காவலர் நினைவு தினத்தையொட்டி, நமது காவல் படையினரின் துணிவையும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பையும்
சவாலான சூழ்நிலைகளில் மக்களுக்கு உதவி செய்வதையும், நான் பாராட்டுகிறேன். கடமையில் இருந்த போது உயிர்த்தியாகம் செய்த காவல் துறை வீரர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்”.
கருத்துகள்