உத்தராகண்டின் பவுரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
உத்தராகண்டின் பவுரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“உத்தராகண்டின் பவுரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு மனதை உருக்குகிறது. இந்த கோரமான தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி”மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த துயரடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவர் என்று நம்புகிறேன்.”உத்தரகாசியில் பனிச்சரிவின் காரணமாக மலையேற்றப் பயிற்சியின்போது என்.ஐ.எம். மலையேற்றப் பயிற்சியாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் இரங்கல்
உத்தரகாசியில் பனிச்சரிவின் காரணமாக மலையேற்றப் பயிற்சியின்போது நேரு மலையேற்ற பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் நிலைமையைக் கண்காணிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“உத்தரகாசியில் பனிச்சரிவின் காரணமாக மலையேற்றப் பயிற்சியின்போது என்.ஐ.எம். மலையேற்ற பயிற்சியாளர்களின் விலைமதிப்பில்லாத உயிர் பிரிந்தது, மிகவும் வருத்தமான செய்தி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.”
கருத்துகள்