மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடு குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளன: மத்திய இணையமைச்சர்
மத்திய அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு எ நாராயணசாமி தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த அவர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக வேலூர் மாவட்டம் தொரப்பாடி அருகே ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியை அமைச்சர் திரு நாராயணசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கருத்துகள்