மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமன், சென்னை மயிலாப்பூரில் உள்ள தண்ணீர் துறை காய் கனிகள் விற்பனை சாலையோரக் கடைகளில் வந்து கீரை மற்றும் காய்கனியை வாங்கினார்.
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், மத்திய நிதியமைச்சர் திடீரென மயிலாப்பூர் பகுதியில் தனது காரை நிறுத்தி சாலையோர கடைக்குச் சென்றார்.இந்த நிகழ்வின் போது, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும், பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மத்திய அமைச்சர், மார்க்கெட்டுக்கு நேரில் சென்று காய்கனிகளை வாங்கியது தொடர்பான வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார் அப்போது காய்கனி விற்பனை பெண் திடீரென நிர்மலா சீத்தாராமன் காலில் விழுந்தார். உடனே அவர் இதெல்லாம் பண்ணாதீங்க என்று அந்த பெண்ணிடம் அறிவுரை கூறினார்இதனையடுத்து காய்கனிகளை வாங்கி கொண்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் உரையாடினார். பின்னர் விற்பனையாளர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் இது குறித்து எதிர் கட்சிகளின் சார்பில் இத்தனை வருடம் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு இவ்வளவு காலங்கள் தெரியவில்லை மக்கள் அவதிப்பட்டு மக்கள் பிரச்சனை வேதனை தெரியவில்லை மேலும் பணப் பிரச்சனை ஜிஎஸ்டி பிரச்சனைகள் மற்றும் சமையல் எரிவாயு விலையும் மற்றும் பெட்ரோலிய விலைஉயர்வு என எவ்வளவோ எவ்வளவு இருக்கு அடுத்த வருஷம் வரப் போகிறது தேர்தலில். அதற்காகவா இந்த காய்கறிகள் வாங்கும் புதிய முயற்சி.என வினா எழுப்பி வருகின்றனர். இந்த நிலை
மக்களுக்கு இது பற்றி நன்றாகவே தெரியும் என பலரும் கருத்துக்கள் தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வு பேசப்படுகிறது.புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் குடும்பம் அசைவ உணவுகளை தவிர்த்து வைணவ வழிபாட்டில் ஈடுபடுவதை முன்னிட்டு. கோழி, ஆட்டிறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகிய நிலையில் சென்னை மற்றும் கோயமுத்தூர் நகரில் நிரந்தரமான சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைகளுக்கு மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சூலூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பல காய்கறிகள் விற்பனைக்கு வரும். நீலகிரியிலிருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்டவை விற்பனைக்கு வருகிறது. சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்வதன் காரணமாக ல் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கனிகள் வரத்து குறைவாகவே இருந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கனிகளின் விலையும் மற்ற நாட்களை விட ரூபாய்.20 முதல் ரூபாய்.30 வரை உயர்ந்துள்ளது.
கோயமுத்தூர் டி.கே.மார்க்கெட்டில் சாதாரண நாட்களில் கேரட் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையாது. தற்போது வளர்த்துக் குறைவால் ஒரு கிலோ கேரட் ரூ.90க்கு விற்பனையாகிறது. கேரட்-ரூ.90, பீன்ஸ்-80, மிளகாய்-ரூ.50, பீட்ரூட்-ரூ.30, முட்டைகோஸ்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, குடைமிளகாய்-ரூ.50, பாகற்காய்-ரூ.60, அவரை-ரூ.60, கத்தரிக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, மொச்சை-ரூ.55, புடலங்காய்-ரூ.45, கோவக்காய்-ரூ.45, சுரைக்காய்-ரூ.50, இஞ்சி-ரூ.40, சேப்பக்கிழங்கு-ரூ.50, சேனை கிழங்கு-ரூ.40, கருணை கிழங்கு-ரூ.50, தக்காளி-ரூ.40, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.20, உருளைக்கிழங்கு-ரூ.30, எலுமிச்சை-ரூ.100க்கு விற்பனையாகிறது. மார்க்கெட்டுகளைத் தவிர்த்து அங்காடிகளில் விலை அதிகமாக உள்ளது காரட் ரூ.110, பீன்ஸ் 95, பீட்ரூட் ரூ.75-க்கு விற்பனை ஆனது. மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கனிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
10 லாரி காய்கனிகள் வர வேண்டிய நிலையில் பாதியாக 5 லாரி காய்கனிகள் மட்டுமே வருகிற காரணமாக அனைத்துக் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. 3 மாத காலமாகவே காய்கனிகளின் விலை சற்று உயர்வாகவே இருந்து வருகிறது. தற்போது தான் மழை குறைந்து, மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் காய்கனிகள் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொள்ளாச்சியிலிருந்து வெளியூர்களுக்கு தினமும் 4 லட்சம் இளநீர் அனுப்பப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார். தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து கோயமுத்தூர் உக்கடம் மொத்த மீன் சந்தை, சில்லறை மீன் சந்தைகளில் விற்பனை மந்தமாக உள்ளது. விற்பனை குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை குறைந்து விட்டது. நுகர்வு குறைவால் இறைச்சி விலையும் குறைந்தது. கடந்த வாரங்களில் ரூ.270க்கு விற்ற 1 கிலோ கோழி இறைச்சி ரூ.70 குறைந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆட்டிறைச்சி 1 கிலோ ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதம் முடியும் வரை இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும் என்றும் இதனால் விலை 50 சதவீதம் அளவுக்கு குறையும் கோயம்பேட்டில் .3000 டன் குறைந்து காய்கனிகள் வரத்தின் காரணமாக காய்கனிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னையின் தேவைக்கு 1200 டன் தக்காளி தேவைப்படும் நிலையில் 480 டன் மட்டுமே வருகை உள்ள நிலையில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து கோயம்பேட்டில் 60 ரூபாய்க்கும் சென்னையின் புறநகர் பகுதிகளில் 70 முதல் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள்