தெலுங்கானா இராஷ்ட்டிரீய சமிதியின் இரண்டு மாநிலத்தில் ஒரே சின்னம் பெற இலக்கு அகில இந்திய கட்சியாக மாற்றம்
தெலுங்கானா இராஷ்ட்டிரீய சமிதியின் தலைவரான கே. சந்திரசேகர ராவ் ,
கட்சியை தொடங்குவதற்கு முன்பு தெலுங்கு தேசக்கட்சியிலிருந்தார். 2001-ஆம் ஆண்டு அவர் கட்சியை தொடங்கும் போது, ஆந்திர சட்டப்பேரவையில் துணை சபாநாயகராகப் பதவி வகித்தார். தனது பதவியை மட்டுமல்லாது ஆந்திர சட்டமன்றத்திலிருந்தும் விலகினார்,
1956-ஆம் ஆண்டில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கு மொழி பேசுவோர் வசிக்கும் ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளுடன் ஹைதராபாத் மாகாணம் ஒன்றிணைக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேசமாக உதயமானது. ஆனால், தெலுங்கானா பகுதியில் வளர்ச்சிப் பணிகள் போதிய அளவில் நடைபெறவில்லை எனக் கருதியவர்கள், தனி மாநிலக் கோரிக்கை வைத்துப் போராடினர்.1969-ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டது. 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போராட்டங்கள் தொடங்கின. உஸ்மானியா, காக்காதியா பல்கலைக்கழக மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என சகல மக்களும் இதில் இணைந்தனர். இதற்கு ராயலசீமா பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
1990 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் மத்தியில் ஆட்சியமைத்தால் தெலுங்கானா மாநிலம் அமைக்கப் போவதாக அறிவித்த நிலையில். 2000 ஆம் ஆண்டு பாஜக, சட்டீஸ்கர், ஜார்க்கண்டு, உத்தர்கண்டு ஆகிய மூன்று மாநிலங்களை அமைத்தது. ஆனால் அப்பொழுது அவர்களின் கூட்டணித் தலைவரான சந்திரபாபு நாயுடு ஒப்புக் கொள்ளாததால் தெலுங்கானா அமைக்கப்படவில்லை. கடந்த 2001 ஆம் ஆண்டு கே.சந்திரசேகரராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரிப்பதே தனது லட்சியமென்று போராட்டத்தைத் தொடங்கினார். கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவின் முதல் முதலமைச்சர் ஆவார். தெலுங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட பிறகு அவர் பதவிக்கு வந்தார். அவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவராவார். சித்திபெட் மாவட்டம் கஜ்வெல் தொகுதியிலிருந்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, அவர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்திபெட் தொகுதியிலிருந்து சட்டசபை உறுப்பினராகவும் மஹபூப்நகர், கரீம்நகர் மற்றும் மேடக் ஆகிய தொகுதியிலிருந்தும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
தேசிய கட்சியாக இருக்கும் கட்சிக்கு மட்டுமே இரண்டு மாநிலத்தில் தேர்தலில் ஒரே சின்னம் கிடைக்கும் இப்போது சந்திரபாபு நாயுடு தலைமையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலத்தில் ஒரே சின்னம் சைக்கிள் உள்ள நிலையில் தற்போது அகில இந்திய கட்சியாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கார் சின்னம் பெற தற்போது அகில இந்திய கட்சியாக மாற்றம் செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளது. அகில இந்திய கட்சியாக மாற்றம் செய்ய இந்திய அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற:
சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும்.
மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
மக்களவை தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும்.
மாநிலத்தில் பதிவாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படும். இப்போது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அகில இந்திய கட்சி என மாற்றப்பட நடவடிக்கை துவங்கியுள்ளது.
கருத்துகள்