முதன்முறையாக இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தந்தைக்குப் பின், மகன் ஏற்க உள்ள நிகழ்வு .
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அடுத்த மாதம் பதவியேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட், இரண்டாண்டு காலம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பிலிருப்பார்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி சந்திரசூட்டின் மகனாவார். நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் 1978 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்திண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 1985 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
அவர் முன்னால் பிதமரான இந்திரா காந்தி காலத்தில் வந்த அவசரகாலநிலையான எமர்ஜென்சியின் போது அதிரடிஅன தீர்ப்புகளை வழங்கியவர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றார்.
"கிஸ்ஸா குர்சி கா" திரைப்படம் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தனது பதவிக் காலத்தில் சிறை தண்டனை விதித்தார். எமர்ஜென்சி காலத்தில் இந்தப் படத்தை இந்திய அரசு தடை செய்த நிலையில், நடந்த சம்பவம்.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அதிரடித் தீர்ப்புகளை வழங்கியவர். தனது தந்தை வழங்கிய இரண்டு தீர்ப்புகளை ரத்து செய்தார்.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பட்டம் பெற்றவர். இளம் வயதில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் அவரும் ஒருவரானார். 1998 ஆம் ஆண்டில், அவர் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் சர்வதேசச் சட்டம் கற்பிக்கும் பேராசிரியராக பணியிலிருந்தவர்.
2000 ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், அங்கு அவர் பதிமூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 2013 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
வழக்கமான நீதிமன்றப் பணி நேரத்தைத் தாண்டி, இரவு வரை அமர்ந்து வழக்குகளின் கோப்புகளை ஆராய்ந்து முடித்து விட்டுச் செல்பவராக உள்ளவர். சபரிமலைக்குப் இளம் வயதுப் பெண்கள் நுழைய அனுமதி உள்பட பல முக்கியமான வழக்குகளில் வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்புகளில் அவரும் ஒரு பகுதியாகவே உள்ளார்.
கருத்துகள்