உத்தராகண்டின் பத்ரிநாத் ஆலயத்தில் பிரதமர் தரிசனமும், பூஜையும் செய்தார்
அலகநந்தா ஆற்றின் இருகரைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்
இன்று பத்ரிநாத் சென்றிருந்த பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ பத்ரிநாத் ஆலயத்தில் தரிசனமும், பூஜையும் செய்தார். பின்னர் பிரதமர் கருவறையில் பிரார்த்தனை செய்தார்.
மேலும் அலகநந்தா ஆற்றின் இருகரைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் பிரதமருடன் உத்ராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் ஆளுநர் ஓய்வு பெற்ற ஜெனரல் குர்மித் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்