கோயமுத்தூர் கார் வெடிப்பு வழக்கை தொடர் விசாரணை நடத்த
NIA-க்கு பரிந்துரை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயமுத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில் கொண்டு இவ்வழக்கை NIA-க்கு மாற்ற பரிந்துரைக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை வரவேற்று ட்விட்டரில்
பதிவிட்டுள்ளார்கோயமுத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோயமுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோயமுத்தூரில் முகாமிட்டுள்ளனர். நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட அதிகாரிகள் நேற்றிரவு கோயமுத்தூர் சென்றடைந்தனர்.
தொடர்ந்து, கோயமுத்தூரில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வழக்கின் விபரங்கள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்
கோயமுத்தூர் உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட பரிந்துரை செய்தும் மற்றும் கோவையில் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதி செய்திட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்