51.42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.15 கிலோகிராம் எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல்
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அபுதாபியில் இருந்து வந்த ஆண் ஒருவர் இன்று (07.11.2022) சோதனை செய்யப்பட்டார். அப்போது அவர் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
1962 சுங்கத்துறை சட்டத்தின் கீழ் 1.15 கிலோகிராம் எடையுடைய 51.42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்த புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்