தமிழ்நாட்டில் கனமழை காரணமாக நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருந்த தட்டச்சுத்தேர்வு நவம்பர் மாதம் . 19, 20-ஆம் தேதிகளுக்கு தள்ளி வைப்பு
தமிழகத்தில் கனமழை எதிரொலி: நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு.
தமிழ் நாடடில் தொடர்ந்து 75 வருஷங்களாக நடைபெறும் தட்டச்சுச் தேர்வுகளை மாற்றி அரசு அறிவித்த புதிய நடைமுறையின் படி, இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள்-1 ஸ்டேட்மென்ட், லெட்டராகவும், தாள்- 2 ஸ்பீடு தேர்வாகவும் அறிவிக்கப்பட்டது.
அதற்கெதிராக சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தட்டச்சுத் தேர்வை இருவார காலங்களுக்கு ஒத்திவைக்குமாறு இடைக்காலத் தடையுத்தரவு காரணமாக தட்டச்சுத் தேர்வுகளை புதிய நடைமுறையில் (இரண்டாம் தாள் முதலாவதாகவும், முதல் தாள் இரண்டாவதாகவும் அக்டோபர் மாதம் .20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனடிப்படையில் தட்டச்சுத் தேர்வுக்கான நவம்பர் மாதம் . 12. 13 ஆம் தேதிகளில் நடைபெறுமென அறிவித்து அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக நவம்பர்.12,13 ஆம் தேதிகளில் நடைபெற வேண்டிய தட்டச்சுச் தேர்வு நவம்பர் மாதம் .19,20 ஆம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தட்டச்சுத் தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார்.
கருத்துகள்