அஞ்சல் அலுவலகங்களில் அக்டோபர் 2 முதல் 31ம் தேதி வரை சிறப்பு தூய்மை முகாம் 2.0
மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு அமைச்சக செயலாளர் வழிகாட்டுதலின்படி, அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சிறப்பு முகாம் 2.0 நடத்தப்பட்டது.
இதன்படி, சென்னை நகர மத்திய மண்டலத்தின் கீழ் இயங்கும் 22 துணை- அஞ்சல் அலுவலகங்களில், கடந்த மாதம் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், 3 ஆயிரத்து 357 கிலோ பழைய கோப்புகளும், ஆயிரத்து 601 கிலோ எடையிலான தேவையில்லாத பொருட்களும், அடையாளம் காணப்பட்டு களையெடுக்கப்பட்டன. இதன்மூலம் ஆயிரம் சதுர அடி இடம் காலியானது.
இதேபோல், சென்னை தியாகராயநகர் வடக்கு மற்றும் மந்தவெளி அஞ்சல் அலுவலகங்களின் வளாகச் சுவர்களில், தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
கருத்துகள்