ரூபாய்.2 கோடி மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை கடத்தலில் ஈடுபட்ட மீனவர்களை கைது செயதது
இந்திய கடலோர காவல்படையின் வஜ்ரா கப்பல் மன்னார் வளைகுடாவில் 14-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சர்வதேச கடல் எல்லைக்கு அருகே, 4 படகுகளை வழிமறித்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த 2 படகுகள் தப்பியோட முயன்றன. அவற்றை விரட்டிச் சென்று சர்வதேச கடல் எல்லை அருகே கடலோர காவல் படை கப்பல் பிடித்தது.
இந்த 4 படகுகளிலும் சுமார் 2.8 எடை கொண்ட 104 மூட்டை பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இதனையடுத்து இந்தியாவைச் சேர்ந்த 2 படகுகளும், இலங்கையைச் சேர்ந்த 2 படகுகளும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு உள்ளூர் அதிகாரிகளிடம் சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன.
கருத்துகள்