சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரான சாலையில் புதிதாக பிரதிஷ்டை செய்த அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி வாலை ஆலயக் கும்பாபிஷேகம்: டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியில் வெகு விமரிசையாக நடக்கிறது.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி வாலை ஆலயம் புதிதாகப் புணரமைக்கப்பட்டு அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையான விழாவாக, டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. அதற்காக யாகசாலைப் பூஜைகள் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்குகிறது. கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி, மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் பணியிலுள்ள இந்நாள் அலுவலர்கள், மற்றும் தலைசிறந்த ஆன்மீகவாதிகளென பல்வேறு தரப்பினரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு இறைவன் அருள் பெறயிருக்கிறார்கள். டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் துவங்குகிறது.
கோவிலூரிலிருந்து காரைக்குடி வரும் சாலையின் அருகில் உள்ள ஜெயம் நகரில் இந்த கோவில் அமையக் காரணமாக இருந்த மகாராஜா சுவாமிகள் மற்றும் ஹரிஹர சித்தர் வாழும் ஐயப்பன் இசக்கி சித்தரின் அருளாலும் மற்றும் பொதுமக்கள் ஆதரவோடும் இந்தக் கோவில் உருவாகியுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், தண்டாயுதபாணி சுவாமி வாலை ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழா யாகசாலைப் பூஜை முறைகளை நகர சிவன் கோவில் அத்யானப் பட்டர் பிரம்ம ஸ்ரீ ரவி சர்மா ஆகம விதிப்படி நடத்தி வைக்கிறார்.
அதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவினரும், பொதுமக்களும், பக்தர்களும் செய்து வருகிறார்கள். அதற்கான யாகசாலைப் பூஜைக்கு கால்கோள் நடு விழா நவம்பர் 20 ஆம் தேதி சிறப்பாக நடந்தது.
கருத்துகள்