மாவட்ட கனிம அறக்கட்டளை இதுவரை 622 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது
மத்திய சுரங்க அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் 23 மாநிலங்களில் உள்ள 622 மாவட்டங்களில் மாவட்ட கனிம அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 இல் திருத்தம் மூலம் மாவட்ட கனிம அறக்கட்டளை என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த அறக்கட்டளையை இலாப நோக்கற்ற அமைப்பாக நிறுவுவதற்கு வகை செய்யும் பிரிவு 9பி-ஐ அறிமுகப்படுத்தியது. சுரங்கம் தொடர்பான செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளின் நலனுக்காக பணியாற்றுவதே இதன் நோக்கமாகும்.
இந்த அறக்கட்டளை மூலம் திரட்டப்படும் நிதி மூலம் பிரதமரின் கனிஜ் க்ஷேத்ரா கல்யாண் யோஜனா செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ. 63534.07 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 37422.94 கோடி செலவிடப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 2,52995 திட்டங்களில் இதுவரை 1,33144 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்