இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூட்டுக்கு பிரதமர் வாழ்த்து
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் செய்தியில் ;
“இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூடுக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் பதவிக்காலம் அவருக்கு இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.”உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுள்ள நிலையில் அவர் வழங்கிய குறிப்பிடட தீர்ப்புகளைக் காண்போம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியேற்ற நீதிபதி யு.யு.லலித்தின் பதவிகாலம் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து இன்று காலை உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுள்ளார் வழக்கறிஞராகப்பணியைத் தொடங்கி, பேராசிரியராகவும், இந்திய அரசின் சொலிஸிட்டர் ஜெனரலாகவும், மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,
அலஹாபாத் உயர்நீதிமன்ற்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த பின் 2016 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் ஏற்றார்.அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆறண்டுகளாக இருந்து வரும் சந்திரசூட் 1057 அமர்வுகளில் சக நீதிபதிகளுடன் 513 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் 94 சேவை வழக்குகளிலும் 89 குற்ற வழக்குகளிலும் சந்திரசூட் தீர்ப்பளித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளில் 45 ம், சிவில் வழக்குகளில் 56 ம், நுகர்வோர் வழக்குகளில் 37 தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார்
கேரளத்தின் மருத்துவ மாணவி ஹாதியா, இஸ்லாமிய மதத்துக்கு மாறி ஷபீன் ஜஹானை திருமணம் செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட், 'யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதையும், எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் முடிவெடுக்கும் உரிமை வயது வந்த பெண்ணுக்குள்ளது.' என்று திருமணம் செல்லும் எனத் தீர்ப்பளித்தார். மேலும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், '10 முதல் 50 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். தீண்டாமைக்குத் தடை விதித்திருக்கும் சட்டத்தையும் இது மீறுகிறது. பெண்களின் சுய உரிமை, சுதந்திரம், மற்றும் கண்ணியத்தை இது சீர்குலைக்கிறது.' என விமர்சித்தார். டெல்லி அரசில் துணை நிலை ஆளுநரின் தலையீடு தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், 'ஆளுநர் டெல்லியின் நிர்வாகத் தலைவர் கிடையாது.
ஜனநாயகம் என்பதே நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத அம்சம். எனவே நிர்வாகத்தை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவே வழிநடத்த வேண்டும். முதலமைச்சரின் உத்தரவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அவருக்கென ஜனநாயகத்தில் சுதந்திரமான அதிகாரமில்லை.' என்று தீர்ப்பளித்தார்.
மேலும் உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்று இருக்கும் நிலையில் அவர் வழங்கிய குறிப்பிடத்தக்க தீர்ப்புகளாக
377 வது சட்டப்பிரிவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த அமர்வில் இடம்பெற்ற சந்திரசூட், இதை எதேச்சதிகராம் கொண்ட காலணியாதிக்க சட்டம் என்று விமர்சித்தார். இந்த சட்டம் சம உரிமை, கருத்து சுதந்திரம், வாழ்க்கை மற்றும் தனியுரிமைக்கு எதிராக உள்ளது என்று கூறி LGBTQ சமூகத்தினருக்கு அரசியலமைப்பு உரிமையுள்ளதாகக் கூறினார். மேலும்
நீதிபதி லோயா வழக்கில்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான சொராபுத்தீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகமிருப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தெஹ்சீன் பூணாவாலா தொடர்ந்த வழக்கை விசாரித்த சந்திரசூட், அதனைத் தள்ளுபடி செய்தார். என்பது குறிப்பிடத்தக்க தீர்ப்புகளாகும்.
கருத்துகள்