முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்
முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
“முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மேலும், தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் நாம் நினைவுகூர்வோம்”.நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தவர். குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்ததால், ‘சாச்சா நேரு’ (Chacha Nehru) என்று போற்றப்பட்டார். இந்த ஆண்டு குழந்தைகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் குழந்தைகளின் உரிமை, அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. நேரு குழந்தைகளை நாட்டின் சொத்தாக கருதினார். குழந்தைகளுக்கு தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர். 1964-ஆம் ஆண்டு பண்டிட் ஜவகர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் கொண்டாட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது.
அப்போதிருந்து, நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியா முழுமையும் இன்று பல்வேறு இடங்களில் நடந்த விழாவில் குழந்தைகள் பங்கேற்ற விழா சிறப்பாக நடந்தது. அதில் காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் குழந்தைகள் தின விழா மிகவும் சிறப்பாக நடந்தது .நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவிகா வரவேற்புரையாற்ற. சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருண்குமார் தலைமையில் குழந்தைகளின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் மாணவர்களின் நடனம், சிலம்பாட்டம், தப்பாட்டம் மற்றும் குழு பாடல்களும் நடைபெற்றது.
நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி குழந்தைகள் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடிய நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர் இளமாறன் அவர்கள் நன்றி கூறினார். மேலும் குழந்தைகள் தினவிழாவினையொட்டி,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்தில்,
சைல்டு லைன் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., இன்று ராக்கிக் கயிறு கட்டி நண்பர்களாக ஏற்றுக்கொண்ட குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கருத்துகள்