பாதுகாப்புக் கணக்குத்துறை சார்பில் ஓய்வூதியதாரர்களுக்கான ஆதார் பதிவு/தகவல் புதுப்பிப்பு முகமை
சென்னையில் உள்ள பாதுகாப்பு கணக்குத் தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள் பயன்பெற வேண்டும் என்ற வகையில் ஆதார் பதிவு/தகவல் புதுப்பிப்பு முகாமை இன்று ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாடு தலைமை அஞ்சல் அலுவலகத்துடன் இணைந்து இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஞ்சல் துறையின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் திரு.டிஜெயசீலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடக்கவரை ஆற்றினார். பாதுகாப்பு கணக்குகள்துறை ஓய்வூதியதாரர்களின் குறைகளை களைய எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் விவரித்தார். ஸ்பார்ஷ் இணையதளத்தின் மூலமான டிஜிட்டல் ஓய்வூதிய நடைமுறைகளையும் அவர் எடுத்துரைத்தார். முன்னாள் படைவீரர்கள் நல வாரியத்தின் துணை இயக்குநர் மேஜர் பிரபாகரன், பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். ஓய்வூதியதாரர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.
கருத்துகள்