ஆந்திரப்பிரதேசத் தெலுங்கு மொழித் திரைப்பட உச்ச நட்சத்திரமான நடிகர் கிருஷ்ணா (வயது 79) காலமானார்.
மூன்று தலைமுறைகளாக தெலுங்கு மொழி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் சாதனை செய்த கிருஷ்ணா, பல்வேறு மொழிகளில் இதுவரை மொத்தம் 350 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார் அவர் தற்போது இன்று காலை காலமானார்: திரையுலகினர் இரங்கல்.
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றிக் காலமானார்
அவர் 1956 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு மொழி திரைப்படங்களில் 350 க்கும் குறையாமல் நடித்துள்ளார் என்பதும் ,தமிழ் மொழியில் ‘கந்தசாமி’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதுடன்
நடிகர் கிருஷ்ணாவின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவிக்கின்றனர் நடிகர் கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக காலமானர். நடிகர் கிருஷ்ணா திடீரென வீட்டில் மயங்கி விழுந்து உடன் சுயநினைவை இழந்துள்ளார். அதையடுத்து, பதறிய அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டது.
அத்துடன் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் நிஜ சாதனையாளர் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையாவார் அவரது மனைவியும் நடிகர் மகேஸ்பாபு தாயாரும் கடந்த செப்டம்பர் மாதம் தான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்த நிலையில் முன்னால் பிரதமர் இராஜீவ் காந்தி இறந்த பினனர் அரசியலில் விலகினார்.
கருத்துகள்