‘குரங்கு பெடல்’ மிதிவண்டியின் மீது ஒரு தலைமுறைக்கு உள்ள உணர்வுபூர்வமான தொடர்பைப் காட்சிப்படுத்தியுள்ளது
கோல்டன் பீகாக் மற்றும் காந்தி விருதுக்கு போட்டியிடும் தமிழ்படம் குரங்கு பெடல்
தந்தைக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாத நிலையில், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதில் குழந்தையின் ஆர்வத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது குரங்கு பெடல் திரைப்படம் .“என்னுடைய குழந்தைப் பருவத்தில் சைக்கிள் மிகவும் சுவாரசியமான விஷயங்களில் ஒன்றாக இருந்ததால் அந்தக் கதை என் மனதில் என்றுமே இருந்துக்கொண்டே இருந்தது.
சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது ஒருவருக்கு நம்பிக்கையைத் தருகிறது, அது என்னை ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தூண்டியது” என்று படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் கூறினார்.
கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ அமர்வில் ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடும் போது, குரங்கு பெடல் மிதிவண்டியின் மீது ஒரு தலைமுறைக்கு உள்ள உணர்வுபூர்வமான தொடர்பைப் காட்சிப்படுத்தியுள்ளது என்றார் கமலக்கண்ணன்.
அதிக பட்ஜெட் படங்களிலிருந்து தனது படத்திற்கு உள்ள போட்டி பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ஒரு திரைப்படம் அதிக பார்வையாளர்களை சென்றடைய சிறந்த கதைக்களம், திரைக்கதை மற்றும் நடிப்பு ஆகியவை முக்கியம் என்று கூறினார்.
நடிகர் காளி வெங்கட் தனது அனுபவத்தைப் பற்றி பேசுகையில், தமிழில் 90 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இந்த படத்தில் அறிமுகமான குழந்தை கலைஞர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன், என்று கூறினார். கதையில் உள்ள உணர்வுகளை தத்ரூபமாக படம்பிடித்து, அதை அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் என்று கதாசிரியர் ராசி அழகப்பன் தெரிவித்தார்.
ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம், சர்வதேச போட்டிப் பிரிவில் விரும்பப்படும் கோல்டன் பீகாக் விருது மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான சர்வதேச கவுன்சில் வழங்கும் காந்தி பதக்கம் ஆகிய இரு பிரிவுகளில் போட்டியிடுகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், இதில் குழந்தை கலைஞர் சந்தோஷ் "மாரி" கதாபாத்திரத்திலும் நடிகர் காளி வெங்கட் அவரது தந்தையான 'கந்தசாமி' கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
திரைப்படம் பற்றி
இயக்குனர்: கமலக்கண்ணன் எஸ்
தயாரிப்பாளர்: மான்டேஜ், யூவிடபள்யூ (UVW)பிசினஸ் பிரைவேட் லிமிடெட்.
திரைக்கதை: பிரபாகர், கமலக்கண்ணன்
ஒளிப்பதிவாளர்: சுமி பாஸ்கரன்
தொகுப்பாளர்: சிவானந்தீஸ்வரன்
நடிகர்கள்: காளி வெங்கட், சந்தோஷ், ராகவன், ஞானசேகர், ரத்தீஷ், ஏ.இ.சாய் கணேஷ்
கதை சுருக்கம்:
1980களின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், குழந்தைக் கதாநாயகன் மாரியப்பன் (மாரி) மற்றும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவனது கனவை பற்றியது. கிராமம் அதன் முதல் சைக்கிள் வாடகைக் கடையைக் காண்கிறது. வாடகைக்கு சைக்கிள் எடுக்க பணம் மறுக்கப்பட்ட மாரி, சைக்கிள் ஓட்டுவதைக் கற்றுக் கொள்வதற்காக சைக்கிளை வாடகைக்கு எடுப்பதற்காக அவனை எப்போதும் செல்லம் கொஞ்சும் தாயிடமிருந்து ரகசியமாகப் பணத்தைப் பெறுகிறான். அவனது சைக்கிள் ஓட்டும் தருணங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் அந்நியர்களை அவன் சந்தித்தல் ஆகியவையே இத்திரைப்படம்.அறியப்படாத மணிப்பூர் குறித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஐஎப்எப்ஐ வழங்குகிறது
53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ள மணிப்பூர் மாநில அரங்கில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்களை படப்பிடிப்பிற்காக அம்மாநிலத்திற்கு ஈர்க்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு திரைப்பட விழா மணிப்பூரி சினிமாவின் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, முதல் மணிப்பூரி திரைப்படம், மாதங்கி வெளியிடப்பட்டது. இதை டெப்குமார் போஸ் இயக்கியிருந்தார். ஐந்து தசாப்தங்களாக மணிப்பூரி சினிமாவின் பயணம் வியக்கத்தக்கதாக வளர்ந்துள்ளது.
திரைப்பட விழாவில் முதன்முறையாக, மாநிலங்களில் திரைப்படத் துறையை ஊக்குவிக்க, பல மாநில அரசுகள் ஃபிலிம் பஜாரில் தங்கள் அரங்குகளை நிறுவியுள்ளன. பீகார், மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், தில்லி, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் தங்கள் அரங்குகளை நிறுவியுள்ளன.
மணிப்பூர் அரங்கின் கருப்பொருள் ‘அறியப்படாத மணிப்பூர் ’. இது முக்கியமாக மணிப்பூர் மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மணிப்பூரின் வரலாறு, தொல்பொருள், கலாச்சாரம், இயற்கை பாரம்பரியத்தை ஆராய வளரும் திரைப்பட தயாரிப்பாளர்களை இது அழைக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்ப்பதும், மாநிலத்தை சிறந்த திரைப்படம் தயாரிக்கும் இடமாக வளர்ப்பதுமே இதன் நோக்கமாகும்.
லோக்டக் ஏரி, உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்காவான கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா போன்ற இயற்கை அழகை இந்த அரங்கு காட்சிப்படுத்துகிறது. உலகிலேயே முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் ஒரே சந்தையான இமா மார்க்கெட் போன்ற கலாச்சார அதிசயங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மணிப்பூர் மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கத்தின் செயலாளரான சுன்சு பச்சஸ்பதிமயும், மணிப்பூரி கலாச்சாரம் கதை சொல்லும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்பதை விளக்கினார்.53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பீகாரை அறிந்துக்கொள்வோம்
வளர்ந்து வரும் திரைப்பட தயாரிப்பாளர்கள், புத்தர் மற்றும் மகாவீரர் பிறந்த பூமியின் வரலாறு, தொல்பொருள், கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தை அறிந்துக்கொள்ள 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பீகார் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் திரைப்படத் தயாரிப்புத் தொழிலை ஊக்குவிக்க ‘ஃபிலிம் பஜாரில்’ தங்களுடைய அரங்கினை நிறுவியுள்ளன.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் மற்றும் இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் பீகார் அரங்கினை திறப்பு விழாவின் போது பார்வையிட்டனர்.
முன்னதாக, பீகார் அரங்கினைத் திறந்து வைத்த புகழ்பெற்ற நடிகர் திரு. பங்கஜ் திரிபாதி, இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தனது சொந்த மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரங்கினை கண்டு மகிழ்ச்சியடைந்தார். திரைப்படம் உருவாக்க திறன் அதிகம் கொண்ட மாநிலமாக பீகார் உள்ளது, அதைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
பீகார் அரசு அதிகாரி திருமதி. பந்தனா பிரேயாஷி கூறுகையில், பீகாரில் படப்பிடிப்புக்கு திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்க்க மாநில அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் விரைவான இணைப்பு மற்றும் வலுவான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அவர் பேசினார்.
ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை கண்காட்சியான சோனேபூர் கால்நடை கண்காட்சி மற்றும் சீக்கிய சமூகத்தின் புனித யாத்திரைகளில் ஒன்றான ஹர்மந்திர் தக்த் ஸ்ரீ பாட்னா சாஹிப் போன்ற கலாச்சார, இயற்கை மற்றும் தொல்பொருள் அதிசயங்களை இந்த அரங்கு எடுத்துக்காட்டுகிறது.
பீகாரில் திரைப்படத் தயாரிப்பின் பாரம்பரியத்தையும் இந்த அரங்கு எடுத்துக்காட்டுகிறது. ரிச்சர்ட் அட்டன்பரோவின் இயக்கத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தின் சில காட்சிகள் பல நூற்றாண்டுகள் பழமையான பாட்னா ஆட்சியர் அலுவலகத்தில் படமாக்கப்பட்டன.பீகாரின் மைதிலி மொழி திரைப்படமான லோட்டஸ் ப்ளூம்ஸ், தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாசப்பிணைப்பை பெருமளவில் சைகை மொழியில் விவரிக்கும் கதை
ஒரு தனிப்பட்ட நபரின் உணர்ச்சிகரமான வாழ்க்கைப் பயணத்தை இயற்கையும், பொதுமக்களும் சாட்சிகளாக விளங்க விவரிக்கப்பட்ட கதையாக லோட்டஸ் ப்ளூம்ஸ் அமைந்திருப்பதாக அதன் இயக்குநர் பிரதீக் ஷர்மா கூறியுள்ளார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிகழ்வில் பேசிய அவர், தனது கதையை பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து நகர்த்தி செல்ல விரும்பியதாக கூறியுள்ளார்.
இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய அஸ்மிதா ஷர்மா கூறுகையில், மனிதனின் வாழ்வில் இயற்கை என்ன திட்டமிட்டிருக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சித்தரிப்பதுதான், லோட்டஸ் ப்ளூம்ஸ் திரைப்படத்தின் மையக்கருத்து என்ற போதும். அந்த திட்டம், சில வேளைகளில் எதிர்பாராத விதமாகவும் அமையலாம் என்பதையும், பல நேரங்களில் மனிதனின் எண்ணம் பலிக்காமலும் போகலாம் என்பதையும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றார். சில தருணங்களில் இயற்கையின் இந்த பயணம் சிரமங்கள் நிறைந்த்தாக இருக்கக் கூடும். ஆனால், இயற்கையிடமும், படைத்தவனிடமும் நாம் முழுஅளவில் சரணாகதி அடையும்போது, நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நாமே எதிர்பாராத வகையிலான விசித்திரமான வழிகளில் தீர்வு கிடைக்கலாம் என்றார்.
பிரபல கதாநாயக நடிகர் அகிலேந்திர சத்ரபதி மிஷ்ரா கூறுகையில், இந்த படத்தில் திரைமொழிக்காகவே இந்த திரைப்படத்தை தேர்வு செய்தேன். என்றும், வாழ்க்கை என்பது தாமரையைப் போன்றது, அது சூரியன் உதிக்கும்போது மலர்ந்தும், அஸ்தமனத்தில் வாடி விடுவதையும் சித்தரிக்கும் வகையில் கதைக்கரு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், பீகாரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பேசும் மைதிலி மொழியை முன்னிறுத்தவே இந்த திரைப்படத்தில் பணியாற்றினேன் என்றும், பெரும்பாலும் பிராந்திய மொழி திரைப்படங்கள், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அத்தகைய திரைப்படங்கள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், பிராந்திய மொழியை முன்னிறுத்தும் திரைப்படங்கள் அதிகளவில் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வாழ்வின் நீட்சியே திரைப்படம் என்றும், திரைப்படங்கள் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை அபரிமிதமான அளவில் நம் கண்முன்னே சித்தரிக்கும் பணியை செய்து வருவதாக கூறினார். ஏனெனில், கலாச்சாரம், மொழி மற்றும் ஆன்மீக பார்வையையும், மொழியின் நவரசங்களையும் திரைப்படம் மனிதர்களின் மனங்களில் விதைக்கிறது என்றார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் பெயர்: லோட்டஸ் பிளூம்ஸ்
இயக்குநர்: பிரட்டிக் ஷர்மா
தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா: அஸ்மிதா ஷர்மா
கதாநாயகர்: அகிலேந்திர சத்ரபதி மிஷ்ரா.
குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் அத் ஷர்மா
கதைச்சுருக்கம்:
இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையேயான நம்பிக்கை மற்றும் அடிப்படை நற்பண்புகளை விவரிக்கிறது. ஒருவரின் ஆத்மாவிற்கும், இயற்கை அன்னைக்கும் உள்ள தொடர்பே வாழ்விற்கு வசந்தத்தை அளிக்கும். மிகக்குறைந்த உரையாடல்களை கொண்டு பீகார் மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், பெரும்பாலான பகுதி செய்கை சமிக்ஞைகளை உள்ளடக்கியது.பான்-இந்திய திரைப்படங்கள் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை: ரிஷப் ஷெட்டி
இந்தியா விவசாயம் சார்ந்த நாடு; நமது சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக, இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் இயற்கை தெய்வத்தை நம்பும் வழக்கம் உள்ளது என்று 53வது சர்வதேச திரைப்பட விழாவின் போது 'கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துதல் மற்றும் புதிய சந்தைகளை அடையாளம் காணுதல் ' என்ற தலைப்பிலான உரையாடலின் போது ரிஷப் ஷெட்டி கூறினார்.
கன்னடத் திரையுலகில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ரிஷப் ஷெட்டி, உலிதவரு கண்டந்தே, கிரிக் பார்ட்டி, கதா சங்கமா, ரிக்கி போன்ற பல திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்றவர். அவரது ‘சர்காரி ஹி. பிரா. ஷாலே, காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய்’ 66வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதை வென்றது. ரிஷப் ஷெட்டி அண்மையில் இயக்கிய காந்தாரா பல வசூல் சாதனைகளை முறியடித்து வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்தப்படத்தில் அவர் நடித்துமுள்ளார்.
காந்தாரா மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே நடந்து வரும் மோதலை படம்பிடிக்கிறது. இது இயற்கை, கலாச்சாரம் மற்றும் புனைகதைகளின் கலவையாகும். நமது கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கை முறைகள் நம் ஒவ்வொருவரிடமும் வேரூன்றியுள்ளன என்றார் அவர். கேள்விப்பட்ட நாட்டுப்புறக் கதைகள் மற்றும் துளுநாட்டு கலாச்சாரத்தில் சிறுவயது அனுபவங்களின் விளைவாக இப்படம் உருவாகியுள்ளது. எனவே, திரைப்படத்தின் பின்னணி இசை இயற்கையாகவே கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ரிஷப் ஷெட்டி, தான் சிறுவயதில் இருந்தே யக்ஷகானா (யக்சகான) கலைஞர் என்று கூறினார். அவர் தொழில்துறையில் அடியெடுத்து வைத்ததில் இருந்தே கம்பளா, தெய்வாராதனே, பூதக் கோலங்கள் போன்ற கலாச்சாரங்களை படங்களில் காட்டுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. "துளுநாட்டில், தெய்வாராதனையின் போது அனைத்து சாதியினரும் சமத்துவம் பெற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், அது இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு பாலம்" என்று அவர் கருத்து தெரிவித்தார்.
காந்தாரா- வில் கம்பாலாவை நிகழ்த்துவதற்காக தினமும் கம்பாலா பயிற்சி செய்ததாகவும் அவர் கூறினார். நம்பிக்கைகள் மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக இருப்பதால், எந்தவொரு கலாச்சார நடைமுறைகளையும் கேலி செய்ய வேண்டாம் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
காந்தாரா-வில் சிவன் பாத்திரம் பற்றி கூறிய அவர், சிறுவயதில் இருந்தே தனக்கு அத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறினார். அவர் முழு திரைப்படத்தையும் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான குந்தபுராவில் படமாக்கினார். அதில் நடித்தவர்களில், பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். நாடகக் கலைஞர்கள் என்று அவர் கூறினார்.
புதிய சந்தைகளை அடையாளம் காண்பது பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட ஷெட்டி, இன்று திரைப்படங்கள் மொழித் தடையைத் தாண்டி வருகின்றன என்றார். பல்வேறு மொழிகளில் இந்திய திரையரங்குகள் இருப்பதாகவும், உள்ளடக்கம் பார்வையாளர்களுடன் இணைந்தால், திரைப்படம் அகில இந்திய திரைப்படமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
90 களின் பிற்பகுதியில் பிராந்திய சினிமாக்கள் மேற்கத்திய திரைப்படங்களின் செல்வாக்கைக் கொண்டிருந்தன என்று அவர் கூறினார். இருப்பினும், இன்று உள்ளூர் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்து படங்கள் வருகின்றன. மொழித் தடை இருந்தபோதிலும், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் காந்தாரத்தை ஏற்றுக்கொண்டனர் என்றார் அவர்.
நடிப்பு மற்றும் இயக்கம் குறித்த அவரது கருத்துகள் குறித்து கேட்கப்பட்டபோது, "இயக்கமே எனது முன்னுரிமை" என்று கூறினார்.‘த்ரீ ஆப் அஸ்’, கொங்கன் பகுதியில் நடக்கும் உறவுகள் குறித்த நாடக பாணியிலான திரைப்படம்: இயக்குனர் அவினாஷ் அருன்
‘த்ரீ ஆப் அஸ்’, மகாராஷ்டிரா மாநிலம் கொங்கன் பகுதியில் நடக்கும் உறவுகள் குறித்த நாடக பாணியிலான திரைப்படம். இயக்குனர் அவினாஷ் அருண் இயக்கிய இத்திரைப்படத்தில் ஷெபாலி ஷா, ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் நடிகர்-பாடலாசிரியர் ஸ்வானந்த் கிர்கிரே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனர் அவினாஷ் அருண் பேசுகையில், “எனது குழந்தைப் பருவத்தில் 3-4 வருடங்களை கொங்கன் பகுதியில் கழித்தேன், அங்குதான் இயற்கையுடன் எனது முதல் தொடர்பு ஏற்பட்டது. எனது திரைப்படங்கள் மூலம் எனக்குள் இருக்கும் குழந்தையைக் கண்டறிய நான் எப்போதும் முயற்சிக்கிறேன்." “கில்லா எனும் மராத்தி படத்தை இயக்கிய 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்” என்று அவர் மேலும் கூறினார்.
கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்யதிருந்த 'டேபிள் டாக்ஸ்' அமர்வில் ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடும் போது, ஜெய்தீப் அஹ்லாவத் "படத்தில் சித்தரிக்கப்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. நானும் அவினாஷும் திரைப்படப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம், படால் லோக்கில் ஒன்றாக வேலை செய்தோம், எனவே நாங்கள் வேலை செய்யும் பாணியை ஒருவருக்கொருவர் அறிந்திருந்தோம். படத்தைப் பொறுத்த வரையில், திரையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்பதால், எல்லாவற்றையும் என்னால் இங்கே சொல்ல முடியாது”, என்றார்.
ஜல்சா, ஹ்யூமன், டார்லிங்ஸ் அல்லது டெல்லி க்ரைம் 2 ஆகிய படங்களில் தனது அடுத்தடுத்த அற்புதமான நடிப்பின் மூலம் ஆண்டு முழுவதும் திரைப்படப் பிரியர்களை கவர்ந்து வரும் ஷெஃபாலி ஷா, இந்தத் திரைப்படம் திருமணத்தைப் பற்றியது மற்றும் வாழ்க்கையைப் பற்றியது என்று கூறினார். “முதலில் இத்திரைப்படத்தின் ஒருவரி கதைமட்டுமே எனக்கு சொல்லப்பட்டது. வலிமையான பெண் போன்ற கதாப்பாத்திரங்களில் இருந்து ஒரு மாற்றத்திற்காக, நான் பலவீனமான பெண்ணாக நடித்துள்ளேன். அதுதான் கதாபாத்திரத்தின் அழகு. ஆனால் வலுவாக இருப்பதால் நான் பாதிக்கப்படக்கூடியவள் அல்ல என்று அர்த்தமில்லை. இரண்டுமே அழகுதான். இரண்டில் ஒன்றை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? வலிமையும் பாதிக்கப்படக்கூடியவையும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘இந்தியன் பனோரமா 2022’ பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் ஒரு படமாக இப்படம் இடம்பெற்றுள்ளது.நாளைய 75 இளம் படைப்பாளர்களுக்கான’ ’53 மணி நேர சவால்’ ‘இந்தியா@100’ என்ற தலைப்பில் ஐந்து அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளது
நாளைய 75 இளம் படைப்பாளர்களின் இரண்டாம் பதிப்பு இன்று “53 மணி நேர சவால்” என்ற போட்டியின் விருது வழங்கும் விழாவுடன் நிறைவு பெற்றது. இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 75 இளைஞர்கள் ‘இந்தியா@100’ என்ற தலைப்பில் 53 மணி நேரத்தில் குறும்படங்களைத் தயாரிக்க வேண்டும்.
இந்த போட்டியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நவம்பர் 21 அன்று தொடங்கி வைத்தார். ஷார்ட்ஸ் தொலைக்காட்சியுடன் இணைந்து தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் இந்த போட்டியை நடத்தியது. போட்டியின் இறுதிக்கட்டம் இன்று நடைபெற்றது.
53 மணிநேரத்தில் 5 குறும்படங்கள் உருவாக்கப்பட்டன. படப்பிடிப்பிலிருந்து இறுதிப் படத்தை வெளிக்கொண்டுவரும் வரை, திரைப்பட இயக்குனர்கள் தங்களுடைய கதைக்கு உயிர் கொடுக்க இடைவிடாமல் உழைத்தனர்.
வெற்றி பெற்ற அணி டீம் பர்பில் ஆகும். அதன் திரைப்படமான ‘டியர் டைரி’, தனது சகோதரியை சந்திக்கும் போது, தனது கடந்தகால மன காயங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு பெண்ணின் கதையை வழங்கியதற்காக நடுவர்களின் பாராட்டை பெற்று இத்திரைப்படம் இந்த போட்டியில் வென்றது. வெற்றி பெற்ற இப்படம், எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி ஒரு புதிய இயல்பு நிலையாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு, இசையமைப்பு, பின்னணிப் பாடல், அனிமேஷன், திரைக்கதை எழுதுதல், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, தொகுப்பு, கலை வடிவமைப்பு போன்ற சினிமாவின் பல்வேறு துறைகளில் உள்ள திறன்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட 15 பேர் இந்த குழுவில் பணியாற்றியுள்ளனர். 53 மணிநேரத்தில் ஒரு படத்தை வெற்றிகரமாக தயாரித்ததற்காக இந்த அணிக்கு ரூ. 2,25,000 மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.
மற்ற நான்கு படங்கள் இதோ.
டீம் ஆரஞ்சின் அந்தர்த்ரிஷ்டி (தி இன்சைட்) பல ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராத ஒரு மனிதனைப் பற்றியது. அவர் வெளி உலகத்தையும் வாழ்க்கையின் சிறிய சந்தோஷங்களையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இத்திரைப்படம்
டீம் யெல்லோவின் ‘தி ரிங்’ திரைப்படம் ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்டது. அவள் ஏற்றுக்கொள்ளாத பாரம்பரியம் அவளிடம் திணிக்கப்படும் அவள் தான் யார் என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணத்தை இத்திரைப்படம் கட்டியுள்ளது.
டீம் கிரீன் எடுத்துள்ள ‘அட்மொஸ்ட்’ திரைப்படம் ஒரு குழந்தைக்கு தந்தை மற்றும் தாய் இருவரும் இருக்க முடியும் என்று கண்டறியும் ஒரு இளம் பெண்ணின் கதை.
டீம் பிங்க் ‘சௌ கா நோட்’ என்று திரைப்படத்தை வழங்கியது. பணம் வழக்கற்றுப் போய்விட்ட உலகத்தில், ஒரு குழந்தை தனக்குக் கொடுக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டை எப்படிப் பயன்படுத்துவது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
ஐந்து படங்களும் 2022 நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு ஷார்ட்ஸ் டிவியில் இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படும். பின்னர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ஒளிபரப்பு செய்யப்படும்
இந்த போட்டியை குறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர், சுதந்திரத்தின் அம்ரித திருவிழாவை கொண்டாடி, இந்தியா சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுகளை நோக்கி பயணிக்கும்போது, இந்தியா முழுவதிலுமிருந்து 75 இளம் திரைப்பட இயக்குனர்கள் 53 மணிநேர சவாலின் மூலம் தங்களின் திறன்களை காண்பிக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
கருத்துகள்