சென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் ராகிங்குக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை கே கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கான ராகிங்குக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கல்லூரி மற்றும் விடுதியில் ராகிங்கை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னை தி.நகர் காவல் துறை உதவி ஆணையர் திரு ஆதர்ஷ் பச்சேரா தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர். மாணவர்களிடையே ராகிங் பழக்கத்தை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இளைய மற்றும் மூத்த மாணவர்களிடையே ஆரோக்கியமான நட்புறவை பராமரிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கல்லூரியின் மூத்த மாணவர் தங்களது படிப்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்
கருத்துகள்