விடுவிக்ககப்பட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக் குற்றவாளிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்.
முன்னால் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் தண்டனை பெற்ற நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கான சதித் திட்டத்தில் பங்குபெற்ற குற்றத்துக்காக 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறுவர் உச்ச நீதிமன்றத்தால் நவம்பர் மாதம் 11 அன்று விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பேரறிவாளனின் விடுதலைக்கு மே மாதம் 18 ஆம் தேதியன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இப்போது அந்தப் பயனை அதே வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்ற நபர்களுக்கும் அளித்தது.ஆனால் வழக்கில் மத்திய அரசை நேரடியாக எதிர் மனுதாரராகச் சேர்க்கவில்லை. அதோடு செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த பின்னரும், மத்திய அரசை ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் உரிய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை தவறு, சிக்கலால் மத்திய அரசால் ஒரு தரப்பாக வழக்கில் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக உரிய வாதத்தையும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்க முடியவில்லை.
அதேபோல், வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்க்காத காரணத்தால்தான், அது தொடர்பான முக்கியமான ஆதார, ஆவணங்களை வாதமாக எடுத்து வைக்க இயலாமல் போனது. மத்திய அரசு தன் தரப்பு வாதத்தை எடுத்துவைக்காத காரணத்தால்தான் இந்த 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என சீராய்வு மனுவில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதை நடுநிலையாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.
முன்னால் பாரதப் பிரதமர் அமரர் இராஜீவ் காந்தி கொலை கொடூரமாக நடத்திய நபர்களான இவர்கள் குற்றம் சாட்டப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட குற்றவாளிகள் அல்ல இவர்கள் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆவர். சம்பவம் நடந்த தினத்தில் அவர்கள் உள்ள படத்தை நீங்களே Zoom செய்து பாருங்கள் . அந்தக் குற்றவாளி நளினிக்கு எதுவுமே தெரியாதென்றால் அவர்கள் எதற்கு மனித வெடிகுண்டான தாணு உடன் உக்கார்ந்திருக்கிரார்? அவர் என்ன காங்கிரஸ் கட்சியின் பிரமுகரா ?
பாம் பிளாஸ்ட் ஆன நேரத்துல இவரும் முருகனும் அங்குதான் இருந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் எப்படி உயிருடன் தப்பினார்கள்.
முடிந்தால் இவர்களுக்கு நீதி கேட்டு சட்டம் பேசும் இவர்கள் கூட்டம் சார்ந்த நீதி காணப் புறப்பட்ட சில இதழியல் நண்பர்கள் தண்டனை முடிந்து விடுதலையான நளினியை இதுக்குப் பதில் சொல்லிட்டு தியாகி..?!.பட்டம் கொடுத்தது போன்று பேட்டி காணலாம்! தேசம் ஒரு தலைவரை இழந்திருக்காது அவரோடு பணி நிமித்தம் இறந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் அது நம் கண் முன் வந்து போகிறது ..மனச்சாட்சி கொண்டு பதில் தேவை சொல்வார்களா? என்ற வினா காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே தோன்றுவதல்ல நமக்கும், நமது வாசகர்கள் அனைவருக்கும் தான் .
ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினியின் மகள் லண்டனில் டாக்டர் ! ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அருகில் ஆதிதிராவிட வகுப்பில் குடிசையிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த செங்கொடி என்ற பெண் தண்டனை பெற்று சிறையில் இருந்த ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.. அதில் என்ன நியாயம் விடை காணுவது பத்திரிகைகளின் தர்மம்.அறம் தளைத்திட, வாய்மை வென்றிட, குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும், முகமற்றவர்களின் முகமாய் விளங்கும்,
பத்திரிக்கை நண்பர்களுக்கு, தேசிய பத்திரிக்கை தினத்தில் பேசவேண்டிய சில உண்மைகளும்.
கருத்துகள்