மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெற சிபிஐ.(எம்) மாநிலச் செயலாளர்
கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணோடு கட்டாயமாக ஆதார் எண்ணையும் இணைத்துப் பதிவுசெய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே வலியுறுத்திய நிலையில் தற்போது
ஆதாரை இணைக்காதவர்கள் மின்சாரக் கட்டணத்தை பெற்றுக் கொள்ள முடியாதென பல இடங்களில் மறுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திலுள்ள லட்சக்கணக்கான மக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாத நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதோடு, மின்சார இணைப்பைத் துண்டிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. அது மட்டுமின்றி உரிய தேதியில் பணம் கட்டாமல் பின்னர் அபராத கட்டணம் சேர்த்துக் கட்ட வேண்டிய நெருக்கடிக்கு மக்கள் உள்ளாவார்கள். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு ஆதாரை இணைக்கும் முடிவினைத் திரும்ப பெற வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழ்நாடு மின்வாரியத்தை வலியுறுத்துகிறது. எனத் தெரவித்துள்ளார்.
கருத்துகள்