அந்தமானில் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டிற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் - தெற்கு அந்தமான் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்
பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டிற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என தெற்கு அந்தமான் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் திருமதி பிரமிளா குமாரி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் - போர்ட்பிளேர், தெற்கு அந்தமான் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்துடன் இணைந்து சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா, தூய்மை இந்தியா இயக்கம் & மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சோல்தாரில் இன்று நடத்தியது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய திருமதி பிரமிளா குமாரி, நாட்டின் வளர்ச்சிக்கு மகளிர் மேம்பாடு அவசியம். இதனைக் கருத்தில் கொண்டே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டங்கள் அனைத்தும் தங்கள் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படுகிறது என இன்றளவும் பலர் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், அந்த திட்டங்களை கிராமப்புற பெண்கள் அறிந்து கொள்ள உதவுகிறது என்று பிரமிளா குமாரி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சோல்தாரி ஒன்றிய கவுன்சிலர் திருமதி. சைதாலி ராய், சோல்தாரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சுப்ரியா ராய், பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. தபசி தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் திரு கே.ஆனந்த பிரபு தலைமை தாங்கினார்.
கள விளம்பர உதவியாளர் திரு எம். முரளி வரவேற்பு ஆற்றினார்.
முன்னதாக மகளிருக்கு கோலப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்