மாநில நிதி அமைச்சர்களுடன் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் தலைமை வகித்தார்
மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்கள் அமைந்த யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடன் புதுதில்லியில் இன்று நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள், மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர், நிதியமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை செயலர், இந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.
கடன் பெறுவதற்கான வரம்பை உயர்த்தியதற்காக பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். பட்ஜெட் உரையில் சேர்ப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை பங்கேற்றவர்கள் நிதியமைச்சரிடம் வழங்கினர். அவர்களது ஆலோசனைகளைப் பரிசீலிப்பதாக கூறிய நிதியமைச்சர், அவர்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
கருத்துகள்