நாகாலாந்தின் நியுலாந்தில் இந்திய கப்பற்படை மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது
நாகாலாந்து மாநிலம் திமாப்பூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தொலைதூர கிராமமான நியுலாந்தில் இந்திய கப்பற்படை 2 நாள் பன்னோக்கு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமை கப்பற்படையின் மருத்துவ சேவைகள் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் ரியர் அட்மிரல் ரவீந்திரஜித் சிங், நியுலாந்து மாவட்ட ஆணையர் திருமதி சாரா எஸ் ஜமீர் ஆகியோர் இன்று (29.11.2022) தொடங்கிவைத்தனர்.
இந்திய கப்பற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள், கண் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் போன்றோர் இந்த முகாமில் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இவர்களால், குறித்துக் கொடுக்கப்பட்ட மருந்துகள், நோயாளிகளுக்கு விலையின்றி வழங்கப்பட்டன.
கருத்துகள்