கடற்படைத் தளபதி ஆர் ஹரிகுமார் ஜப்பான் பயணம்
கடற்படைத் தளபதி திரு ஆர் ஹரி குமார் 05 முதல் 09 நவம்பர் 2022 வரை ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்குள்ள யோகோசுகாவில் 06 நவம்பர் 2022 அன்று நடைபெறும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் 70 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச கடற்படை மதிப்பாய்வு நிகழ்வைக் காணவுள்ளார்.
இந்தப்பயணத்தின் போது, மேற்கு பசிபிக் கடற்படை கருத்தரங்கத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜப்பானால் அங்குள்ள யோகோகமாவில் 07-08 நவம்பர் 2022 நடத்தப்படும் 18வது கருத்தரங்கில் அவர் கலந்துகொள்கிறார். அந்த கருத்தரங்கத்தின் கடற்படை கண்காணிப்பாளர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் கடற்படைத் தளபதி திரு ஆர் ஹரி குமார் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்த முக்கிய நிகழ்வுகளில் இந்தியா மற்றும் இந்திய கடற்படையை அவர் பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பிக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் பங்கேற்புடன் யோகோசுகாவில் நடைபெறும் 30 வது ஆண்டு மலபார் நடவடிக்கை நிகழ்வின் தொடக்க விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். மலபார் நடவடிக்கை 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் பிற பிரதிநிதிகளுடன் கடற்படைத் தளபதி திரு ஆர் ஹரி குமார் கலந்துரையாடுகிறார்.
மலபார் நடவடிக்கை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய கடற்படைக் கப்பல்களான ஷிவாலிக் மற்றும் கவரட்டியும் 02 நவம்பர் 2022 அன்று ஜப்பானின் யோகோசுகாவுக்கு வந்தடைந்தது. இந்த பன்னாட்டு நிகழ்வுகளில் இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கப்பல்கள் கலந்து கொள்வது, சர்வதேச அரங்கில் இந்திய கப்பல் கட்டும் தளங்களின் கப்பல் கட்டும் திறன் வெளிப்படும்.
கடற்படைத் தளபதி திரு ஆர் ஹரி குமாரின் இந்த ஜப்பான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்
ஜப்பான் உடனான உயர்மட்ட இருதரப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பலதரப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமையும்
கருத்துகள்