அரசு மருத்துவர்களின் கவனக்குறைவே கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் உயிரிழப்பிற்கு காரணம் அமைச்சர் தகவல்
தமிழ்நாடு கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா சென்னை ராஜிவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பலனின்றி உயிரிழப்பு.
தமிழ்நாடு கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால் ஜவ்வு பிரச்சனை காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியாஇன் உயிரிழப்பிற்கு காரணம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென மருத்துத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் ரத்த ஓட்டம் நின்றுள்ளது. மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சைக்காக போடப்பட்ட கட்டு காரணமாக வலி ஏற்பட்டுள்ளதென அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். மாணவி பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சையளித்த மருத்துவர் சோமசுந்தரம், மருத்துவர் பால் ராம் சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றிய இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சோம சுந்தரம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட பால் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் உத்தரவிட்டுள்ளார்.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூபாய்.10 லட்சம் நிவாரணமும் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும். மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியா உயிரிழப்பிற்கு காரணமாகிரது. அவர்களின் மீது சட்டப்படிஅன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இதில் பொதுநீதி யாதெனில் மாண்புமிகு அமைச்சர் அவர்களே அங்கு மட்டுமா கவனக் குறைவு அனைத்து மருத்துவமனைகளின் நிலையும் அதுவே தங்களது பார்வை எங்கும் வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை.
மருத்துவச் சேவை என்பது வணிக நோக்கமாக மாறிவருகிறது. என்பதை அமைச்சர் நன்கு அறிவார்.
கருத்துகள்